Coimbatore

News November 17, 2024

கோவையில் மதிமுக அலுவலகம் உடைப்பு: போலீஸ் விசாரணை

image

கோவை பீளமேட்டைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (52). இவர் மதிமுக பீளமேடு பகுதி வார்டு செயலாளர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள மதிமுக 28வது கிளை அலுவலகம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. பின்னர் இது குறித்து வெள்ளியங்கிரி நேற்று பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 17, 2024

கோவையில் ஆட்டோ ஓட்டும் ஷர்மிளா

image

கோயமுத்தூர் மாவட்டத்தில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா காஞ்சிபுரம் டு சோமனூர் வழியாக பேருந்து இயக்கி வந்தார். பேருந்து ஓட்டுவதை நிறுத்திவிட்டு தற்போது ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ இயக்கி வருகிறார். தற்போது சமூக வலைதளங்களில் அவரது திறமையை பாராட்டி பொதுமக்கள் கருத்தினை பதிவிட்டு வருகின்றனர். ஷர்மிளா பேருந்து ஓட்டும் போது அனைத்து அரசியல் தலைவரும் பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2024

கோவையில் 8ஆவது உயர் கல்வி மாநாடு

image

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் நேரு ஸ்டேடியம் வளாக செஞ்சுரி புக் ஹவுஸில் புத்தகக் கண்காட்சி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.உயர் கல்வி மாநாடு இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 8ஆவது உயர் கல்வி மாநாடு கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் யாதுமாகி நின்றாள் சிறப்புரை சூலூர் எம்.கே.புதூர் விவேகானந்தர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறகிறது.

News November 17, 2024

கோவையில் விரைவில் வருகிறது ‘டேக் முறை’?

image

கோவை அரசு மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் டாக்டரிடம் ஒரு வாலிபர் அத்துமீற முயன்றார். அப்போதே, மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம், மாநகர போலீசார், வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கோவை அரசு மருத்துவமனையில், ‘டேக் முறை’ அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக, டீன் நிர்மலா நேற்று தெரிவித்தார்.

News November 17, 2024

பெரியநாயக்கன்பாளையத்தில் ஆதார் சிறப்பு முகாம்

image

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஜடல் நாயுடு வீதி சக்திநகர் நூலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆதார் அட்டைகளில் திருத்தம் செய்தல், செல்போன் எண் இணைத்தல், புகைப்பட மாற்றம் செய்தல் போன்ற ஆதார் அப்டேட் செய்யும் பணிகள் நவ.18ஆம் தேதி  முதல் நடைபெறவுள்ளன. இதில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை செலுத்தி தங்களது ஆதாரை அப்டேட் செய்து கொள்ளலாம் என பேரூராட்சி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

News November 17, 2024

கோவையில் அபூர்வ வெள்ளை மயில் மீட்பு

image

கோவையில் நேற்று காயத்துடன் காணப்பட்ட லூசிசம் எனப்படும் மரபணு நோயால் ஏற்பட்ட வெள்ளை இறகுகளுடன் கூடிய அரியவகை மயிலை தமிழ்நாடு வனத் துறை ஊழியர்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவன உறுப்பினர்கள் மீட்டனர். திணைக்களத்தின் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் (ஆர்ஆர்டி) உறுப்பினர்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை நல்லம்பாளையம் சிங்கனூர் இருந்து மீட்டனர்.

News November 16, 2024

கோவை: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤பெட்ரோல் குண்டு வீச்சு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு ➤போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை ➤கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை ➤கோவையில் வைரலாகும் வீடியோ ➤சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு ➤நண்பர்களுடன் கங்குவா படம் பார்த்த நடிகர் சிவக்குமார் ➤அமைச்சரின் செயலுக்கு மரியாதை ➤கோவையில் நில மோசடியில் 5 பேர் கைது ➤கோவை: தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு.

News November 16, 2024

பெட்ரோல் குண்டு வீச்சு: வானதி சீனிவாசன் கண்டனம்

image

திருநெல்வேலி, மேலப்பாளையத்தில் அமரன் படம் வெளியான திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாக்கு வங்கி அரசியலுக்காக அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தை திமுக அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News November 16, 2024

கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை

image

கோவை மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கால்நடைகள் முதல் இருமுறை பிடிபட்டால் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் பிடிபட்டால் கோசாலையில் ஒப்படைக்கப்படும். மேலும் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

News November 16, 2024

நண்பர்களுடன் கங்குவா படம் பார்த்த நடிகர் சிவகுமார்

image

கோவை அவினாசி சாலையில் உள்ள திரையரங்கில் நடிகர் சிவக்குமார், சூர்யா நடித்த கங்குவா படத்தை, நண்பர்கள் மற்றும் சொந்த ஊர் மக்களுடன் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தார். நடிகர் சிவக்குமார் சொந்த ஊரான கோயமுத்தூரில் பால்ய நண்பர்களுடன் சேர்ந்து அவிநாசி சாலையில் விமான நிலையம் அடுத்த “பிராட்வே திரையரங்கில்” ஏப்பிக் ஸ்கிரீனில் 3டியில் சொந்த ஊர் மக்களோடு மக்களாக அமர்ந்து தனது மகன் சூர்யா நடித்த படத்தை பார்த்தார்.

error: Content is protected !!