India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இருக்கும் சாலையை நான்கு வழிச்சாலையாகத் தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோவை திருப்பூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நேற்று முன்னாள் காவல்துறை பொது நல அறக்கட்டளை சார்பாக, காவல்துறையினரின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டு நிதி ஒரு கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகுதியான காவல்துறையினரின் குழந்தைகளின் உயர்கல்வி க்காக வழங்கினார். இதில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு இதனை வழங்கினார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி ஈஷா யோகா மையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஈசாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதனை கண்டித்து அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) வாயிலாக 590 பயனாளிகளுக்கு ரூ.6.72 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் டாம்கோ வாயிலாக மொத்தம் 481 பயனாளிகளுக்கு ரூ.4.70 கோடி மதிப்பில் தனிநபர் கடன்களும், 205 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பில் குழு கடன்களும் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.
பாரதியார் பல்கலையின் உதவித்தொகையுடன் ஒன்றரை ஆண்டுகள் சுற்றுச்சூழல் துறையில், ஆராய்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு திட்டத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர் மற்றும் கள உதவியாளராக பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியான நபர்கள் வரும், 28ம் தேதிக்குள் அவர்களது சுயவிவர பட்டியலை, arulpragasan@buc.edu.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை உள்ள ஈஷா யோக மையத்தினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கான அழகுல ஒண்ணு கூந்தல் அழகு’ என்று முத்தரசன் அவர்கள் கூறியிருக்கிறார். பெண்களின் அழகு கூந்தலில் இல்லை. குடும்பம், சமுதாயம், சித்தாந்தம், மதம் உள்ளிட்ட காரணிகளின் கட்டாயங்கள் ஏதும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை சுயமாக அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் இன்று(நவ.17) நடந்த குற்ற நிகழ்வுகள் ஒரு பார்வை : உக்கடம் காவல் நிலையம்: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 2 நபர் கைது. ரத்தினபுரி காவல் நிலையம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 2 நபர் கைது. ஆர்.எஸ் புரம் காவல் நிலையம் , சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 35 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு பாடத் திட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை பந்தய சாலையில் உள்ள காவல் நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் போராட்டத்தில் ஈடுபட்டார். அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத் மற்றும் அவரது கட்சியினர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை பந்தய சாலையில் உள்ள காவல் நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜூன் சம்பத் (ம) இந்து மக்கள் கட்சியினரை கைது செய்யப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.