India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமலையாம்பாளையத்தில் செயல்படும் நேரு கல்விக் குழுமத்தின் கீழ் இரண்டு பொறியியல் கல்லூரி, ஒரு கலை அறிவியல் கல்லூரி, ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மற்றும் பள்ளி ஆகியவை செயல்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக ரூ.4 கோடி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருப்பதால், புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகின்ற சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று கூறியதாவது: சமூக நலத்துறையின்கீழ் இயங்கி வருகின்ற சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பன்முக பணியாளர் என மூன்று இடங்களுக்கு பணியாளர்களை நியமிக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள வகுப்பு அல்லது டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவர்கள் 2024–25ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற https://bcmbcmw.tn.gov.in/ welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 53 கோரிக்கை மனுக்கள் மக்கள் அளித்தனர். அதை பெற்ற மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
2024-2025 ஆம் நிதியாண்டில் கோவை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இவ்விருதுக்கு தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் (22.11.2024)-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண் கூடுதல் காவல் கண்காணிப்பாளரை, செல்போனில் அழைத்து தகாத வார்த்தையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் அசோக் குமாரை கைது செய்துள்ள காவல்துறையினர் இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருமத்தம்பட்டி அருகே ரூ.50 கோடி மதிப்பீட்டில் 111 ஏக்கரில் பாதுகாப்பு அம்சங்களுடன், அதிவேகம், தாக்குப்பிடிக்கும் திறன் உள்ளிட்ட சோதனைகளுக்கு ஏற்ற சர்வதேச தரத்திலான கார் பந்தய மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் மதியம் 12 முதல் இரவு 9 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10 முதல் இரவு 9 மணி வரை இதில் பயிற்சி பெறலாம் என டிராக் ஹெட் விசால் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் நிர்வாகி, உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.11.2024 க்குள் விண்ணப்பித்துக் எல்லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ரமேஷ் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை, அன்னூர் நீதிமன்றங்களிலும் வருகிற 14.12.2024 அன்று தேசிய அளவிலான லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது என்றார்.
கோவை மாவட்டம் காந்திபுரத்திலிருந்து சென்ற அரசு பேருந்து குப்பேபாளையத்தில் சாலை ஓரம் குடிநீர் பைப் பதிக்க தோண்டிய குழியில் இன்று சிக்கியது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது பின்னர் சிறிது நேரம் கழித்து பேருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.