India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானத்தின் வரைபடம் அடுத்த மாதம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களைப் போல, கோயம்புத்தூரில் அமைக்கப்படும் மைதானம் நவீன வசதிகளுடன் உலக தரம் வாய்ந்த மைதானமாக அமைக்க தமிழ்நாடு விளையாட்டு துறை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு 2024-25ஆம் நிதியாண்டின் 2ஆம் அரையாண்டு வரையிலான கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்களையும் பொதுமக்கள் செலுத்துவதற்கு வரும் 23,24இல் வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் முகாம் நடைபெறும் அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
ஈசா யோகா மையத்தில் நேற்று இன்சைட் எனும் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத், ராக்கெட்களை உருவாக்கியவர் அப்துல் கலாம் என்றும், இன்று இளைஞர்களுக்கு ஈசா உருதுணையாக உள்ளது என்றார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி (26.11.2024 மற்றும் 27.11.2024) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், ஐஸ் கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வருகின்ற (27.11.2024) “போன்சாய் செய்முறை மற்றும் தொழில் நுட்பங்கள்” பற்றிய ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கு கட்டணம் ரூ.1000 ஆகும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு 99654-35081 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வரும் 26, 27 ஆகிய 2 நாள், வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 99949-89417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறப் போவதாக, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ 20 பொறுப்பாளர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேறிகிறோம். சீமான் பேச்சு முன்னுக்கு பின்னாக உள்ளது. எந்த கட்சியில் இணைய போகின்றோம் என இன்னும் முடிவு செய்யவில்லை. அடுத்தகட்ட தலைவர்கள் யாரும் இல்லை. சீமான் எடுக்கும் முடிவில் உடன்பாடு இல்லை” எனக் கூறியுள்ளார்.
கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் உட்பட 20 பேர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். கட்சி நிர்வாகிகள் தேர்வு, வேட்பாளர் தேர்வில் சீமான் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், சீமான் மீதான அதிருப்தியின் காரணமாகவே கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது நாம் தமிழர் கட்சிக்கும் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொள்ளாச்சி உட்பட புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழ்நாடு ஃபேக்ட் செக் தகவல் வெளியிட்டுள்ளது. இது போன்ற எந்த அறிவிப்பும் தமிழ்நாடு அரசால் வெளியிடவில்லை என்றனர். தவறான தகவல் பரவுகிறது எனவே பொள்ளாச்சி மக்களே ஷேர் பண்ணுங்க.
கோவை வேளாண் பல்கலை வளாகத்தில்,சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கும் வருவாயை உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்குச் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,மாதவன்,யோகிபாபு நடிப்பில் உருவாகும் திரைப்படம், சூர்யா நடிப்பில் உருவாகும் திரைப்படம் ஆகிய இரு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் வரும் வாரங்களில் துவங்க உள்ளது.இதற்கான முன்ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றது
Sorry, no posts matched your criteria.