India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
EPFO அமைப்பு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிதி ஆப்கே நிகாட் 2.0 என்ற பெயரில் மாதாந்திர சிறப்பு கூட்டம் நடத்தி சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறது. இந்த வகையில் நாளை (நவ.27) பீளமேடு,PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் காலை 10 மணி முதல் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே PF வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குறைகளை சரி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி பந்தலூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன், துடியலூர் மருத்துவமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தாயின் சொந்த ஊரான ராஜபாளையம் செல்கையில், அப்பகுதியை சேர்ந்த ஆனந்தி என்பவரை காதலித்துள்ளார். திருமணத்திற்கு மறுக்கவே, ஆனந்தி தற்கொலை செய்துள்ளார். ஆத்திரமடைந்த ஆனந்தியின் தந்தை மலைக்கனி, அண்ணன் ராஜாராம் தமிழ்ச்செல்வனை கொலை செய்துள்ளனர். இவ்வழக்கில் இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (27.11.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மைலம்பட்டி, குனியமுத்தூர், காளப்பநாயக்கன்பாளையம், செஞ்சேரி மலப்பாளையம், வடக்கிபாளையம், குமாரபாளையம், மலையடிப்பாளையம், அங்கலக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.
கோவை மாவட்ட திராவிடர் கழகத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கோவை மாவட்டத்தில் பல இடங்களில் இன்னும் தீண்டாமை அப்படியே நிலவுகிறது. உதாரணமாக பன்னீர் மடை பகுதியில் உள்ள மின் மயானத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு புதைக்க அனுமதி அளிப்பதில்லை என்று மனு அளித்தனர். இதனை உடனடியாக ஆட்சியர் ஆய்வு செய்து தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றார்.
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினர். இந்த நிலையில் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று சூலூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். பின் அவர்களை அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்றார்.
கோவை ஆலாந்துறை அருகே உள்ள ஈசா யோகா மையத்தினர் இன்று கூறியதாவது,ஈசாவின், ‘மண் காப்போம், மண் நம் உயிர்’ என்பதை உலகெங்கும் சொன்னவர் சத்குரு எனவும், ‘மண் காப்போம்’ எனும் தலைப்பில் திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாழவைக்கும் வாழை எனும் திருவிழாவில் விஞ்ஞானி செல்வராஜன் கூறியதாக கூறியுள்ளனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, ரயில் நிலையம் சந்திப்பு வரை செல்லும் வழியில், தனியார் பேருந்து ஒன்றில் நேற்று பயணித்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் எனபவர், ரூ.8 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.10 கட்டணம் வசூலித்ததற்கு எதிராக போராட்டம் நடத்தினார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கூடுதலாக பெறப்பட்ட ரூ.2ஐ வழக்கறிஞிடம் திருப்பிக் கொடுத்தனர்.
கோவையில் சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த பணிக்கு பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். தற்போது ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் – டேட்டா (Process Executive – Data) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், கடைசி தேதி குறிப்பிடவில்லை.
கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பொங்கல் அன்று மத்திய அரசின் பணிகளுக்கான தேர்வு இருந்தால் நிச்சயமாக அது பற்றிய தகவல்களை நிதி அமைச்சரிடம் தெரிவிப்போம் என்றார். விஜய் கட்சியுடன் கூட்டணியா? என கேள்விக்கு, யாருடன் கூட்டணி அமைப்பது, எப்போது “கூட்டணி என்பது எங்கள் கையில் இல்லை” எனவும், கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதா? என்ற கேள்விக்கு தெரியவில்லை என்றார்.
கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில், 2021 ஏப்ரல் முதல் 2024 அக்டோபர் 31 வரை, ஒரு லட்சத்து 5,085 விவசாயிகளுக்கு, 1,367.56 கோடி அளவுக்கு பயிர்க்கடன், 17 ஆயிரத்து 443 விவசாயிகளுக்கு, 116.39 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன், 32 ஆயிரத்து 575 குழுக்களுக்கு, 280.28 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கடன், வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.