India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை சிட்டி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று 50க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். அதில் நவஇந்தியாவில் செயல்பட்ட நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ரூ.1 லட்சத்துக்கு மாதம் ரூ.9,000 வட்டி வழங்கப்படும் என்றும், ஓராண்டு முடிந்ததும் முதலீட்டு தொகை திருப்பித்தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை நம்பி ரூ.12 கோடி வரை முதலீடு செய்தோம். இதுவரை வட்டியோ, முதலோ திரும்ப தரவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளரான பாலச்சந்திரன் ஸ்டெல்லா மேரி என்ற ஆசிரியையிடம் பணி நியமனத்துக்காக கடந்த 2019இல் ரூ.20,000 லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு கோவை லஞ்ச ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி மோகன் ரம்யா அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தும் உத்தரவிட்டாா்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு, நீலகிரி செல்வதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதகையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக முர்மு, கோவை விமான நிலையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் காரணமாக கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, குன்னூர் வழியாக திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலை பல்வேறு துறைகளிலும், கோவை மாவட்டத்தில் உள்ள பல்கலை., அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பி.எச்டி., பகுதி மற்றும் முழுநேர படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் https://b-u.ac.in/ என்ற இணைய தளத்தின் மூலம் வரும் 28ஆம் தேதி முதல் டிச., 15ஆம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு சற்றுமுன் கோவை வந்தடைந்தார். முன்னதாக ஹெலிகாப்டரில் நீலகிரிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை காரணமாக சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்க பகுதியில் மழை பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர உள்ளார். முன்னதாக டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து, ஹெலிகாப்டரில் ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் இறங்கி காரில் ஊட்டி ராஜ்பவனில் வந்து தங்க உள்ளார். ஜனாதிபதி வருகையையொட்டி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்றிரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை, கோவை எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பெருவாரியான குளம், குட்டைகள் நிறம்பிய நிலையில் உள்ளது. எனவே இந்தாண்டு கோடை சாகுபடியாக நிலக்கடலை சாகுபடியை செய்யலாம் என கோவை வேளாண் கல்லூரி, வேளாண் இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார். டிசம்பர், மற்றும் ஜனவரி மாதம் ஏற்ற மாதமாக உள்ளது. எனவே விவசாயிகள் இந்த ஆண்டு கோடை பயிராக நிலக்கடலை சாகுபடி செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர் வீட்டுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கவிதா (37) கடந்த 18 நாட்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்துள்ளார். நாட்கள் செல்ல கவிதாவை திட்டி, தாக்கி வீட்டிற்குள் அடைத்து வைத்துள்ளார். பின் நேற்று ஜன்னல் வழியே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தந்தார். பின் அவரை போலீசார் மீட்டு, சிவக்குமாரை விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.