Coimbatore

News November 28, 2024

கவுன்சிலர் மறைவு: முதல்வர் இரங்கல்

image

கோவை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கோவை மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி விபத்தில் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News November 28, 2024

கோவை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் மரணம்

image

கோவை மாநகராட்சியின் 56வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் காங்கிரஸ் கட்சியின் கோவை மூத்த நிர்வாகி. இவர் நேற்று கோவை நொய்யலாற்று பாலத்தில் இருந்து தவறி விழுந்து, படுகாயம் அடைந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 28, 2024

கோவையில் மின்தடை அறிவிப்பு

image

கோவை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் இன்று (28.11.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒத்தக்கால்மண்டபம், பாப்பம்பட்டி, பீடம்பள்ளி, இரும்பொறை, கலங்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் கரண்ட் கட்டா? கமெண்ட் பண்ணுங்க. SHARE IT.

News November 28, 2024

விஸ்வகர்மா திட்டத்தில் அரசியல் விளையாட்டு வேண்டாம்

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய பல்லாயிரம் கைவினைஞர்கள் பேரார்வத்துடன் இருக்கும் நிலையில், அதில் தனது அரசியல் விளையாட்டை திமுக நடத்துவது வேதனை அளிக்கிறது. மேலும் விஸ்வகர்மா திட்டத்தில் அரசியல் விளையாட்டு வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

News November 28, 2024

கோவை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 28, 2024

கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களில், வைப்பு நிதிப் பத்திரம் பெற்று, 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள், ஊரகப் பகுதியில் உள்ளவர்கள், தங்களது வைப்பு நிதிப் பத்திரத்துடன், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர்நல அலுவலர்களை நேரில் சென்று முதிர்வுத் தொகையினை பெறலாம் என்றார்.

News November 27, 2024

கோவை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

image

கோவை மாநகரில், சமூக வலைதளம் மற்றும் இதற்கென பிரத்தியேகமாக உள்ள செயலிகளில், ஓரினச்சேர்க்கை மற்றும் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, இரவு நேரங்களில் தங்களை தனிமையில் சந்திக்க வரவழைத்து, பணம் மட்டும் உடைமைகளை பறித்துச் செல்லும் குற்றங்கள், நடைபெற்று வருகிறது. எனவே இத்தகைய மோசடிகள் குறித்து விழிப்புடன் இருங்கள் என, கோவை மாநகர காவல்துறையினர் இன்று எச்சரித்துள்ளனர்.

News November 27, 2024

கோவையில் யானை வழித்தடத்தில் மண் திருட்டு: நீதிமன்றம் கேள்வி!

image

கோவையில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மண் எடுப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மலைகள் காணாமல் போயுள்ளன, இதற்கு கனிம வளத்துறை நடவடிக்கை என்ன? சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? என, தமிழக அரசை, நீதிமன்றம் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளது.

News November 27, 2024

கணித திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

கோவை கொடிசியா சாலை அருகில் உள்ள கோவை மண்டல அறிவியல் மையத்தில் கணித திறனறித் தேர்வு 05.01.2025 அன்று நடைபெற உள்ளது. இதில் 5 முதல் 8ஆம் வரையிலான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் வருகின்ற 20.12.2024 தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 85239-09178 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 27, 2024

மேட்டுப்பாளையம் புதிய டிஎஸ்பி அதியமான் பொறுப்பேற்பு

image

மேட்டுப்பாளையம் உட்கோட்ட டிஎஸ்பியாக பாலாஜி கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வேலூரில் இருந்து பயிற்சி முடித்த அதியமான் இன்று மேட்டுப்பாளையம் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு முன்னாள் டிஎஸ்பி பாலாஜி வாழ்த்தினை தெரிவித்து பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய டிஎஸ்பிக்கு சமூக அலுவலர்களும், காவலர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

error: Content is protected !!