India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாநகராட்சி, மாநகர காவல்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை நடத்துகின்றன. அதன்படி வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6:30 மணி முதல் 9 மணி வரை ஆர்.எஸ்.புரம் டி.பி சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மீண்டும் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது கோவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவை, நொய்யல் அற்றங்கரையில் 56ஆவது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டார். சூலூர் மற்றும் சிங்காநல்லூர் என இரு காவல் நிலைய எல்லையில் கிருஷ்ணமூர்த்தியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வழக்கை யார் விசாரிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும், சூலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது ஜெய்பீம் பட காட்சியை நினைவுபடுத்துவதாக இருந்தது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மது மட்டுமல்லாமல் மற்ற போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.12 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளது. இணைய தளத்தில் மூழ்கி படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்க புதிய மையம் அமைக்கப்பட உள்ளது என மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்றிரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை, கோவை எஸ்பி அலுவலகம் இன்று (நவ.28) வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான, முதல்வர் திறனாய்வு தேர்வு வரும் ஜன.,25ஆம் தேதி நடைபெற உள்ளது என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 1000 மாணவர்கள் இதற்காக தேர்வு செய்ய உள்ளனர். இவர்களுக்கு 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பம் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை இன்று தெரிவித்தது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, கோவை மாவட்டத்தில் வரும் டிச.1ம் தேதி ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் டிச.2ம் தேதியும் கோவைக்கு, கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையம் வழியாக கடந்த, ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ஏழு மாதத்தில், 18.38 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இது கடந்தாண்டை ஒப்பிடுகையில் 4.3 சதவீதம் அதிகம். இதில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 2.58 லட்சம் பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்துள்ளனர். முந்தைய மாதங்களை ஒப்பிடுகையில், இது 5.6 சதவீதம் அதிகம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டி வரும் டிச.11 முதல் 17ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் நடைபெற உள்ளது. இதில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தமிழக அளவில் பங்கேற்க கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் மாதேஷ் தேர்வாகியுள்ளார். மாணவரை நேற்று பள்ளியின் தலைமையாசிரியர் புவனேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தின் ஒப்புமை தொடர்பு பட்டியலை சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://coimbatore.nic.in/survey/ என்ற இணையவழி முகவரியில் கீழ்கண்டவாறு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவோராக விருப்பமுள்ள, 18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு, தேனீ வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல் தயாரித்தல் குறித்து ஒரு மாத கால இலவச பயிற்சி காரமடையில் வழங்கப்படவுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 99761 80670, 94427 75263 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.