India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவசர கட்டுப்பாட்டு மைய எண் – 0422 – 2302323 என்ற எண்ணிலும், வாட்ஸ் அப் எண் – 81900-00200 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் மண்டலம் வாரியாக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவை, பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின், செவிலியர்கள் பயன்படுத்தப்படும் கழிவறையில், பேனா கேமரா வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை வைத்தவர், அதே மருத்துவமனையில், பயிற்சி மருத்துவராக உள்ள வெங்கடேஷ் என்பது, காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் பரவலாக லேசான மழை பெய்யக்கூடும். வரும் 2ஆம் தேதி, ஆனைமலை 12.9 மி.மீ., அன்னூர் 15.6, காரமடை 17.6, கிணத்துக்கடவு 16.4, மதுக்கரை 21, பெ.நா.பாளையம் 15.6, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு 9.0, சர்க்கார் சாமக்குளம் 15.3, சுல்தான்பேட்டை, 13.4., சூலூர் 19.8, தொண்டாமுத்தூர் 28 மி.மீ. மழை பெய்யும் என கோவை வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் நேற்று தெரிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் முதல் அவிநாசி வரையிலான 38 கிலோ மீட்டர் தூரத்தை ரூ.250 கோடி மதிப்பில், நான்கு வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்திட்டப் பணிக்காக மேட்டுப்பாளையம் – அவினாசி வழித்தடத்தில் உள்ள ஏறத்தாழ 1,400 மரங்கள் அகற்றப்பட உள்ளன. அகற்றப்படும் மரத்துக்கு ஏற்ப பத்து மடங்கு மரங்கள் புதிய இடத்தில் நடவு செய்து வளர்க்கப்படும் என்று தெரிவித்தனர்.
கோயமுத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் ஆகிய பகுதிகளிலும், அன்னூர் துணை மின் நிலையத்திற்குட்டபட்ட, அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கோவை சூலூர் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் ரமணன் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், காலநிலை மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது நகரப் பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது என்றார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, கோவையில் டிச.1,2 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு (ம) மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஞாயிறு முதல் செவ்வாய் வரை, கோவையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இது 1977க்கு பிறகு, முதல் முறையாக வரும் புயல் மழை என்றும் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் எச்சரித்துள்ளார். வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால், நீலகிரிக்குப் பயணம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தில், ஆர்.எஸ்.புரம், உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் பகுதிகளில் இன்று (நவம்பர்.29) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று கோவை மாநகர போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தனது 45வது புதிய திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பெற்ற 1956-ஆம் ஆண்டு, டிசம்பர் 27-ஆம் தேதியை, நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று, அரசு ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி அரசுப் பணியாளர்களுக்கு கணினித் தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள் ஆகியவை நடத்தப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.