India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் 1450-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் சர்வர் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பி.ஓ.எஸ்., மெஷின் வேலை செய்யவில்லை. இதனால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் வழங்க முடியவில்லை. நேற்று ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட பெஞ்சல் புயல் கரையைக் கடந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக இன்று கோவை மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழையா? கமெண்ட் பண்ணுங்க.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது, விஜய்யின் வருகை புதிது அல்ல. ஆனால் விஜய்யின் சித்தாந்தம் புதிது. அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும். அப்போது தான் அவரது நிலை தெரியவரும். விஜயின் கொள்கைகள் வெளியில் வரவேண்டும் என்றார்.
கோவை மாவட்டத்தில், காட்டூர், சாய்பாபா காலனி, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் இன்று (டிசம்பர்.1) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று கோவை மாநகர போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் சின்னமானது, புதுச்சேரி அருகே தொடர்ந்து அதே இடத்தில் நகராமல் நீடித்து வருகிறது. அரபிக் கடல் உயர் அழுத்தம் சற்று வலுவிழந்து காணப்படுவதால், இந்த புயல் சின்னம் மேற்கு நோக்கி நகர சற்று காலதாமதம் ஆகியுள்ளது. இந்த புயல் சின்னமானது மேற்கு நோக்கி நகர சற்று கால தாமதமாவதால், கோவை மாவட்டத்தில் மழை தொடங்க இன்று மாலை/ இரவு ஆகிவிடும் என வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் கூறியுள்ளார்.
1 வருடம் கழித்து இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியானது மீண்டும் கோவையில் இன்று துவங்கியுள்ளது. முதல் நாளான ஆர்.எஸ்.புரம் டிபி சாலையில் இன்று காலை சுமார் 6:30 மணிக்கு நிகழ்ச்சியானது துவங்கியது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தனர். இதில் பல்வேறு சினிமா பாடல்கள், இசை நிகழ்ச்சிகள், குழு நடனங்கள் என ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
கோவை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிசம்பர் 5-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவையில் 01.12.2024 முதல் 03.12.2024 வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கனமழை இருப்பதால் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1077 மற்றும் 0422-2306051 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் 24 மணி நேரமும் இயங்கும். மேலும் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், ஆர்.எஸ்.புரம், உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் பகுதிகளில் இன்று (நவம்பர்.30) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று கோவை மாநகர போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.