India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்ட விவசாயிகள் டி.ஏ.பி உரத்திற்கு பதிலாக, சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தினை எண்ணெய் வித்து பயிர்களில், டி.ஏ.பி உரத்திற்கு மாற்றாக பயன்படுத்தும் பொது, மகசூல் அதிகரிப்பதுடன், எண்ணெய் அளவும் அதிகரிக்கிறது. டி.ஏ.பி உரமானது மண்ணில் உப்பு நிலையை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (14.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டில் இதுவரை கோவை மாவட்டத்தில், 72 பேர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் இன்று கூறியதாவது. “ஒரே கூட்டணி, ஒரே தலைமை என்பதை முடிவு செய்து விட்டு, ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்க கூடாது. இந்தியா கூட்டணியை தலைமை தாங்க காங்கிரஸ் கட்சிக்கு திறமை இல்லை என்று, அந்த கூட்டணிக்குள் சண்டைகள் எழ ஆரம்பித்து விட்டது” என தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் 2024-25ஆம் இரண்டாம் அரையாண்டு வரை செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் முதலிய வரிகளை செலுத்த அரசு விடுமுறை நாள்களில் தவிர அனைத்து சனி (ம) ஞாயிறு ஆகிய நாள்களில் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறவுள்ளது. அவ்வகையில் இன்று (14.12.24), நாளை (15.12.24) வரிவசூல் முகாம் நடைபெறவுள்ளது. மிஸ் பண்ணிடாதீங்க
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இன்றிரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை, கோவை எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் அனைத்து தாலுகா அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் பிரிவில் நாளை (டிச.14) காலை 10 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ரேஷன் கார்டு நகல், மொபைல் போன் எண் மாற்றம் மற்றும் குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் தொடர்பாக மனுக்கள் கொடுத்து திருத்தம் செய்து கொள்ளலாம் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்று (13.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை, மதுக்கரை மரப்பாலம் பகுதியில் மலை மேல் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை, பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் சிவபெருமான்,நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்துடன் தீப ஒளியில் ஜொலித்த சிவபெருமான் மற்றும் நந்தி பகவானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.13) 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.