Coimbatore

News November 8, 2024

புதிதாக குடிநீர் இணைப்பு பெறுவதற்கான சிறப்பு முகாம்

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகின்ற நவ.13ஆம் தேதி தொடர்புடைய மண்டல அலுவலகங்களில் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 8, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கோவை மாவட்டத்தில் இன்று (07.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

360 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

image

கோவை, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக இன்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை காவ‌ல்துறை‌யின‌ர் முத்துகவுண்டன்புதூரில் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பாண்டி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 360 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

News November 7, 2024

இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤மருதமலையில் சூரசம்ஹார விழா ➤ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்த அமைச்சர் ➤மாணவர்களுக்கான மாபெரும் கல்விக்கடன் முகாம் ➤முதல்வர் பொன் உருக்குவது போல் ஓவியம் ➤முதல்வர் விழாவில் மயங்கிய தொண்டர் ➤ கோவையில் 36,000க்கு வேலைவாய்ப்பு ➤ கோவையில் ரூ.16,000 ஊதியத்துடன் இலவச பயிற்சி

News November 7, 2024

மாணவர்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம்

image

கோவை மாவட்டம், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற்ற மாணவர்களுக்கான மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாமில் 8 மாணவர்களுக்கு ரூ.85.89 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று வழங்கினார். இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், பி.எஸ்.ஜி டெக் கல்லூரி முதல்வர் பிரகாசம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

News November 7, 2024

முதல்வர் பொன் உருக்குவது போல் ஓவியம்

image

கோவையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய முதல்வர் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் இன்று கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் ராஜா முதல்வரின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உருகிய நெஞ்சம் என்ற தலைப்பில் முதல்வர் பொன் உருக்குவது போல் ஓவியம் வரைந்து நன்றி தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

முதல்வருக்கு வீரவாள் பரிசளிப்பு

image

தமிழக முதல்வர் கோவையில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தின் போது, பி.வி.ஜி.திருமண மண்டபத்தில் நடைபெற்ற, கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மலர்மாலை அணிவித்து, வீரவாள் ஒன்றினை பரிசளித்தார். முதல்வர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

News November 7, 2024

கோவை: மாதம் ரூ.16,000 ஊதியத்துடன் இலவச பயிற்சி

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி வழங்குகிறது. இதில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு சான்றிதழுடன் மாத ஊதியம் 16,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். கோவையில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு 80728-28762, 90258-08570 அழைக்கலாம்.

News November 7, 2024

கோவையில் இன்று கல்விக்கடன் முகாம்: மிஸ் பண்ணிடாதீங்க!

image

கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் இன்று பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

கோவை சிட்டி போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

image

கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,  மாநகரில் உள்ள சில கல்லூரிகளில் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை தடுக்க போலீஸ் தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்லூரி நிர்வாகத்தினரும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே போதை பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க முடியும். மாணவர்களின் மோதல் குறித்து தகவல் அளிக்காத கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.