India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கோவையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி 600-க்கு 346 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். கணவன் இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராணி, வீட்டில் இருந்தே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். 70 வயதிலும் படித்து தேர்ச்சி பெற்ற இவரை வாழ்த்தலாம். (SHARE பண்ணுங்க).
▶️கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 0422-2300600/200/300. ▶️ கோவை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் 9442643535. ▶️ பொள்ளாச்சி DSP – 8826540639, 04259-224233. ▶️ பெரியநாயக்கன்பாளையம் DSP – 9498193087, 0422-2695590 ▶️ பேரூர் DSP – 9442188727. ▶️கருமத்தம்பட்டி DSP – 9498101183. ▶️மேட்டுப்பாளையம் DSP – 9698541544. ▶️ வால்பாறை DSP – 9003681542, 04253-282820. இதை Share பண்ணுங்க.
பொள்ளாச்சியில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி மே.1ஆம் தேதி முதல் நடக்கிறது. இதில் 5 வயது முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு நடனம், இசை, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள மாணவர்கள் 97515- 28188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலைப் பண்பாட்டு மைய இயக்குனர் நீலமேகன் தெரிவித்துள்ளார்.
▶️ பொள்ளாச்சி டிஎஸ்பி ஸ்ருதி சிங் – 04259-224233.
▶️ பெ.நா.பாளையம் டிஎஸ்பி பொன்னுசாமி-0422-2695590.
▶️ பேரூர் டிஎஸ்பி சிவகுமார்- 94421-88727.
▶️ கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமன்- 9498101183.
▶️ வால்பாறை டிஎஸ்பி பவித்ரா – 90036-81542.
▶️ மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான்- 96985-41544. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணி, SAVE பண்ணுங்க.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் 3,935 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த 25ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு வரும் மே.24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இத்தேர்வுக்கு இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்பும் நபர்கள் வரும் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை, கரும்புக்கடை சேர்ந்தவர் சுமையா பானு (22). இவருக்கு திருமணம் முடிந்த பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவரது மாமனார் வீட்டில், அதிக வேலை செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று சுமையா பானு தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கை விரக்தி அடைந்த சுமையா பானு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, நரசிம்மநாயக்கன் பாளையத்தில், கடந்த 300 ஆண்டு காலமாக லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இங்கு பக்தர்கள் வைத்திடும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவதால், ‘‘நாளை என்பதே நரசிம்மப் பெருமாளிடம் இல்லை’’ என்கிறார்கள் இறையருளை உணர்ந்தவர்கள். மேலும், ராகு, கேது தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்தும், மஞ்சள் காப்பிட்டும் வேண்டிக் கொள்கின்றனர். SHARE பண்ணுங்க!
கோவை மாநகரில் நடப்பாண்டில் 78 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். பல்வேறு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் குற்றங்கள் தடுப்பதற்காக காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு 51 பேர் மீது இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த ஆண்டு இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அட்சய திருதியை குறைவில்லாத பெருக்கத்திற்கான நாளாகும். இந்நாளில் கடவுளை வணங்கினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவை வழிபட வேண்டிய முக்கிய கோயில்கள் ▶️மருதமலை முருகன் கோயில், ▶️கோனியம்மன் கோயில் ▶️மேட்டுப்பாளையம் வனபத்திர காளியம்மன் கோயில் ▶️காரமடை அரங்கநாதர் சுவாமி கோயில், ▶️தண்டுமாரியம்மன் கோயில் ▶️பூரி ஜகனத் கோயில் ▶️ஆனைமலை மாசாணி அம்மன் ▶️கல்லாறு பழப்பண்ணை.
கோவை: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.