India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் WhatsApp Chatbot அறிமுகம் செய்துள்ளது. 9445033364 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ என மெசேஜ் அனுப்பி பேருந்து சேவைகள் பற்றிய தகவல்களை பெறவும், புகார் அளிக்கவும் பயன்படுத்தலாம். இதனால் சென்னைக்கு வரும் வெளியூர் பயணிகளுக்கும் மற்றும் சென்னை வாசிகளுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
சென்னை சாலிகிராமம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் உஷா (54) நேற்று (பிப்.06) காலை தனது வீட்டிலுள்ள பூஜை அறையில் சாமி கும்பிடுவதற்காக அகல் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது திடீரென நைட்டியில் தீப்பற்றி எரிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.60 சதவீதத்தில் காயங்களோடு உஷாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேகே நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர மதுபானகூடத்தில், நடிகர் ரிஷிகாந்தை மதுபோதையில் தாக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காயங்களுடன் ரிஷிகாந்த் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், மருத்துவமனையில் இருந்து அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஹரிஷ் (27) என்பவரை, தேனாம்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பெண் பொறியாளர்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாதம் ரூ.62,000 சம்பளத்தில் பெண் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. தகுதியும் அனுபவமும் வாய்ந்த பெண் பொறியாளர்களுடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு 044-24378000 என்ற எண்ணை அழைக்கலாம். வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். <
மாநகராட்சி வசூலிக்கும் வணிக உரிமை கட்டணம் ரூ.1,000 ஆக குறைக்க வேண்டும் என ஆணையரிடம் வணிகர் சங்கங்களில் பேரமைப்பினர் ரிப்பன் மாளிகையில் மனு அளித்தனர். அந்த மனுவில், “உரிமை கட்டணம் ரூ.650 இருந்து ரூ.3,050 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வணிகர்கள் பலர் சில்லறை வணிகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வணிக உரிமை கட்டணத்தை ரூ.1,000 ஆக குறைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று (பிப்.7) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், அயப்பாக்கம், ராஜம்மாள் நகர், திருவேற்காடு, நந்தம்பாக்கம், நாவலூர், சிறுசேரி, OMR சாலை, புதுப்பாக்கம், நொளம்பூர், MGR பல்கலைக்கழகம், ஜே.ஜே.நகர், வானகரம் சாலை, ஈடன் அவென்யூ, நூம்பல் மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க
சென்னையில், கோலம்போட்டுக் கொண்டிருந்தபோது பெண் ஒருவர் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், கொலை செய்யப்பட்டவரின் அக்கா மகளின் கணவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மனைவியை கொலை செய்ய திட்டமிட்டபோது, அதற்கு சின்ன மாமியார் இடையூறாக இருந்ததால் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு டோல்கேட் முறையில் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, 2 சக்கர வாகனத்திற்கு ரூ.5 மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.20 என்ற அளவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாதம் ரூ.1,02,060 வரை வருவாய் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த துணை நடிகரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவனுக்கு, சினிமா துணை நடிகரான ஆலப்பாக்கம் ஹரி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் இன்று (பிப்.6) பாலியல் தொந்தரவு கொடுத்த துணை நடிகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மகிழ்திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் இன்று (பிப்.6) தமிழகம் முழுவதும் வெளியானது. சென்னையில் உள்ள ரோகினி, காசி, கமலா, தேவி ஆகிய திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் முதல் காட்சியைக் காண ஆரவாரத்துடன் திரையரங்கிற்கு வருகை தந்தனர். பொங்கலுக்கு திட்டமிட்டு தற்போது படம் வெளியாகி இருக்கிறது.
Sorry, no posts matched your criteria.