Chennai

News February 9, 2025

ஊழியர்களை கண்டித்ததால் மேலாளர் அடித்து கொலை

image

மணலி புதுநகரில் 4 நாட்கள் வேலைக்கு வராததால், ஊழியர்களை மேலாளர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் மேலாளரை சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டெய்னர் பெட்டக மேலாளரான சாய் பிரசாத்தை, மது போதையில் சுத்தியால் தாக்கிவிட்டு 2 இளைஞர்கள் தப்பி ஒட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 9, 2025

பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இளைஞர் கைது

image

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு முகநூலில் தினேஷ் என்ற ஜுனியர் மாணவர் பழக்கமானார். கடந்தாண்டு, தினேஷ் அவரது ஆபாச படத்தை அப்பெண்ணுக்கு அனுப்பி வீடியோ காலில் 3 முறை அழைத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தினேஷை கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, நேற்று முன்தினம் (பிப்.7) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News February 8, 2025

சென்னை பெட்ரோலியக் கழகத்தில் வேலை

image

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர்,உதவி அலுவலர்,அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் https://cpcl.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 60 சதவீத மதிப்பெண்ணும் இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

News February 8, 2025

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

வள்ளலார் நினைவு தினத்தை (பிப்.11) முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு (உரிமம் மாற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511 (a) ஆகியவற்றின் கீழ், மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்களில்  மதுபான விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News February 8, 2025

24,963 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: மாநகராட்சி

image

சென்னை மாநகராட்சியை தூய்மைப்படுத்தும் விதமாக தூய்மை பணியாளர்கள் இரவும் பகலுமாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமானப் பணிகளின் கழிவுகள், பூங்காக்களில் தேங்கும் கழிவுகள், சாலையோரம் கொட்டப்படும் வீட்டு கழிவுகள் உள்ளிட்டவைகள் தீவிரமாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 1 மாதத்தில் மட்டும் 24,963 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

News February 8, 2025

1851இல் தொடங்கப்பட்ட ‘மெட்ராஸ் அருங்காட்சியகம்’

image

1851ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை அல்லது மெட்ராஸ் அருங்காட்சியகம், கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக கட்டப்பட்ட இந்தியாவின் 2ஆவது பழமையான அருங்காட்சியகமாகும். சோழர், விஜயநகரம், ஹொய்சலா மற்றும் சாளுக்கியர் உட்பட அனைத்து முக்கிய தென்னிந்திய காலத்தையும் குறிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கன்னிமாரா பொது நூலகமும் உள்ளது. நீங்களும் நேரில் சென்று பாருங்கள்.

News February 8, 2025

முதல்வர் ஸ்டாலின் திடீரென மருத்துவமனையில் அனுமதி

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக போருர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தகவல் தெரிவித்த போருர் ராமசந்திரா மருத்துவமனை நிர்வாகம், “வழக்கமான சாதாரண உடல் பரிசோதனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனை வந்துள்ளார்” என தெரிவித்துள்ளது. பின்னர், சிகிச்சை முடிந்து அலுவலகம் சென்றார்.

News February 8, 2025

தனியார்துறை வேலைவாய்ப்பு: 20,000 காலிப்பணியிடங்கள்

image

மாதவரத்தில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (பிப்.8) நடைபெறுகிறது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 20,000+ காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News February 8, 2025

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்

image

பிப்., மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இன்று (பிப்.8) நடைபெற உள்ளது. இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோக திட்டத்துடன் தொடர்புடைய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

News February 8, 2025

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!