India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சர்க்கார் பட்டா என்பதை வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழியுள்ளது. இதனால் சென்னையில் 29,000 பேர் பலன் அடைவார்கள் என்றும், நீர்நிலை புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்றும், திமுக ஆட்சியில் இதுவரை 10 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
தாம்பரம், திரு. வி. க நகர் பகுதியைச் சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன் (24). செங்கல்பட்டு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர், பல பெண்களிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, தனிமையில் இருக்கும்போது காணொளி எடுத்து மிரட்டி வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சென்னை காமிக் கான் (comic con) என்ற காமிக்ஸ் நிகழ்ச்சி இரண்டாவது முறையாக இன்று (பிப்.09) நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பிரபல காமிக்ஸ் புத்தகங்கள், காமிக்ஸ் ஹீரோக்களின் பொம்மைகள், படங்கள், ஆடைகள், ஸ்டிக்கர்கள், கைக்குட்டை, செயின் என காமிக்ஸ் உலகின் அனைத்து கதாபாத்திரங்களும் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
ராயப்பேட்டை அருகே உள்ள மவுண்ட் ரோடு மற்றும் பீட்டர்ஸ் சாலை சந்திப்பில், சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு மசூதி மிகவும் பிரபலமான ஒன்று. ஷியா முஸ்லிம்களுக்கு மசூதி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இது உலகெங்கிலும் உள்ள ஷியா பிரிவினரிடையே மதிக்கப்படும் முகமது நபியின் பேரனான இமாம் ஹுசைனுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு, நாள்தோறும் தொழுகை நடைபெறும். இஸ்லாமியர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் கார்த்தி (25). இவர், நேற்று (பிப்.8) தான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணியாளர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடினார். ஆரவாரம் செய்த கார்த்திக்கிற்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்.9) நடைபெறுகிறது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் படப்பிடிப்பு எத்தனை நாட்கள் நடைபெறும்? என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, “இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறும்” என பதிலளித்தார். மேலும், நடிகர் ரஜினிகாந்தை காண அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் சென்னையில் இன்று (பிப்.9) நடைபெற்றது. இதில், துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
மினி பேருந்துகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாயும், 4 கிலோமீட்டர் முதல் 6 கிலோமீட்டர் தூரம் வரை 5 ரூபாயும், 6 கிலோமீட்டர் முதல் 8 கிலோமீட்டர் வரை 6 ரூபாயும், 18 முதல் 20 கிலோமீட்டர் வரை 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இந்தப் புதிய கட்டணம் வரும் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.