Chennai

News February 11, 2025

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை ஏற்படுத்துவதால் மஞ்சப்பை விருதுக்கான விண்ணப்பங்களை, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். பிளாஸ்டிக் தடைகளை செயல்படுத்தி மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிகங்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் என பரிசுகள் வழங்கப்படும்‌.

News February 11, 2025

காதலியின் தாயை கொலை செய்த காதலன்

image

முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மைதிலி (60). இவரது மகள் ரித்திகா (26), தனது உடன் பணிபுரியும் ஷாம் (28) என்பவரை காதலித்துள்ளார். இதனை மைதிலி கண்டித்துள்ளார். நேற்று (பிப்.10) கண்டித்ததோடு, ஆத்திரமடைந்து ஷாமை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். ஷாமிடம் மைதிலி சண்டை போட, ஷாம் கழுத்தை நெரித்து மைதிலியை கொலை செய்தார். ஜே.ஜே.நகர் போலீசார் ஷாமை கைது செய்தனர்.

News February 11, 2025

சென்னையில் பனிமூட்டம்: 7 விமானங்கள் தாமதம்

image

சென்னையில், கடந்த சில நாள்களாக பனிமூட்டம் அதிககளவில்  நிலவி வருகிறது. இதன் காரணமாக விமான நிலையத்தில் தொடர்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாள்களாக விமான நிலையத்தில் ஏற்பட்ட கடும் பனி மூட்டம் காரணமாக, அதிகாலையில் இயக்கப்பட்ட 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

News February 11, 2025

1,124 காலிப் பணியிடங்கள்: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு <>செய்யப்படுவார்கள்<<>>. ஷேர் பண்ணுங்க

News February 11, 2025

லியாஸ் தமிழரசன் கைது

image

லியாஸ் தமிழரசனின் லீலைகள் குறித்து பதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, இந்த பெண் மட்டுமல்லாமல் மேலும் பல பெண்களுடன் அவர் தனிமையில் இருந்த வீடியோக்கள் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களிடமும் ஒரே வசனத்தை கூறி ஏமாற்றியது தெரிய வந்த நிலையில், தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

News February 11, 2025

பல பெண்களிடம் ஆசை வார்த்தைக்கூறி வன்கொடுமை

image

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, அதனை மறுத்ததோடு வீடியோவை லீக் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் லியாஸ் தமிழரசன். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சோதனை செய்தபோது, பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் மற்றும் நகையை பெற்றது தெரியவந்தது. மேலும், பல பெண்களுடன் அவர் இருந்த வீடியோக்களும் அதில் அவரது செல்போனில் இருந்தது.

News February 11, 2025

யார் இந்த லியாஸ் தமிழரசன்?

image

சென்னை, செம்பாக்கம் திருவிக நகரைச் சேர்ந்த லியாஸ் தமிழரசன், தற்போது தனியார் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார். மேலும், பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 2018 ஆம் ஆண்டு 22 வயது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதனை அப்பெண்ணுக்கே தெரியாமல் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.

News February 11, 2025

பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி கைது

image

சென்னையில், காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக செங்கல்பட்டு பாஜக இளைஞரணி செயலாளரான லியாஸ் தமிழரசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில், மேலும், பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் நகை, பணத்தையும் பெற்றுள்ளார்.

News February 11, 2025

புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை…

image

ராயபுரம் துரை தெருவைச் சேர்ந்த விஜயன் (26), ஒண்டி குப்பத்தைச் சேர்ந்த பவித்ரா (24) இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், வீடுகளில் இருந்து வெளியேறி 2 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு நெல்லையில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளனர். 2 நாளிலேயே இருவரும் வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 10, 2025

முதல்வரை சந்தித்த புதிய நிர்வாகி

image

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசியப் பல்கலைக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (பிப்.10) நேரில் சென்று வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது கலைஞரின் புதையல் என்ற புத்தகம் முதல்வருக்கு ரவீந்திரன் வழங்கினார்.

error: Content is protected !!