Chennai

News February 13, 2025

புறநகர் AC ரயிலின் சிறப்பம்சங்கள் 3/3

image

மெட்ரோ ரயிலைபோலவே தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் ஓடும்போது கதவுகள் மூடிவிடும். அதேபோல், கூட்டம் அதிகமாக இருக்கும்போது, பயணிகளிடையே ஏற்படும் புழுக்கத்தை கட்டுப்படுத்த மின்விசிறிகள் உள்ளன. மேலும், ரயில் விபத்துகளை தடுப்பதற்காத ‘கவாச்’ தொழில்நுட்பமும் இந்த ரயிலில் உள்ளது. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 1 வாரத்துக்குள் இந்த ரயில் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும்.

News February 13, 2025

புறநகர் AC ரயிலின் சிறப்பம்சங்கள் 2/3

image

நின்று செல்லும் பெண் பயணிகளுக்கு எளிதாகப் பிடித்து நிற்பதற்காக கைப்பிடிகள் தாழ்வாக தொங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் அமா்ந்தபடி 1,116 போ், நின்றப்படி 3,798 போ் என மொத்தம் 4,914 போ் பயணிக்கலாம். ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள், அவசர காலங்களில் ரயில் ஓட்டுரிடம் பேச ‘டாக்பேக்’ அமைப்பு, தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன.

News February 13, 2025

புறநகர் AC ரயிலின் சிறப்பம்சங்கள் 1/3

image

மெட்ரோ ரயில்களைபோல் இந்த ரயிலும் பயணிகள் முதல் பெட்டியிலிருந்து இறுதி பெட்டி வரை செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பெட்டிகளைவிட அதிக பயணிகள் செல்லும் வகையில் இந்தப் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பெரிய கண்ணாடி ஜன்னல்கள், பயணிகளுக்கு GPS அடிப்படையில் தகவல்கள் தெரிவிக்க எண்ம பலகைகள், ஒலிப் பெருக்கிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. முதல், கடைசி பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

News February 13, 2025

விரைவில் புறநகர் மின்சார AC ரயில்

image

கடற்கரை – செங்கல்பட்டு இடையே குளிா்சாதன மின்சார ரயில் இயக்கப்படும் என்று கடந்த 2019இல் ரயில்வே வாரியம் அறிவித்தது. இதையடுத்து, முதல்கட்டமாக 12 பெட்டிகள் கொண்ட 2 குளிா்சாதன மின்சார புகா் ரயில்களைத் தயாரிக்க ICF-க்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிா்சாதன மின்சார புகா் ரயில் தயாரிக்கும் பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

சென்னையில் குடிநீர் விநியோகம் ரத்து

image

பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், ராயபுரம், புரசைவாக்கம், பெரியமேடு, சவுகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, திரு.வி.க.நகர், ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை (பிப்.14) முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

News February 13, 2025

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை

image

அசோக் நகரில் உள்ள தனியாா் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து பெற்றோா் விசாரித்தபோது, பள்ளியின் தமிழ் ஆசிரியா் சுதாகா் (43) பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த மாணவா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அந்த மாணவா் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். போலீசார் சுதாகா் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

News February 12, 2025

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 12, 2025

சென்னையில் நாளை 25 புறநகர் ரயில்கள் ரத்து

image

பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப். 13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News February 12, 2025

1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து, வருகின்ற 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்தகங்களை தொடங்கி வைக்கிறார். சென்னையில் மட்டும் கொளத்தூர், தி.நகர், ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்படுகிறது. இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கிடைக்கும். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!