Chennai

News March 9, 2025

பிறந்து 42 நாட்களான குழந்தை உயிரிழப்பு 

image

கோயம்பேடு, ரோகினி தியேட்டர் அருகே உள்ள பாலத்தின் கீழ் வசிக்கும் தம்பதியின் குழந்தை (42 நாள்), பிறந்ததிலிருந்து உடல் நலக்குறைவுடன் இருந்து வந்துள்ளது. நேற்று (மார்.8) காய்ச்சல் அதிகமாக இருந்தது. உடனே, கே.எம்.சி மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 9, 2025

ஓட்டலில் பாலியல் தொழில்: பெண் கைது

image

தி.நகர் போலீஸ் குவாட்டர்ஸ் சாலையிலுள்ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று (மார்.8) அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஷைனி (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக தங்க வைத்திருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

News March 9, 2025

சென்ட்ரல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

ரயில் நடைமேடைகளில் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில், சென்ட்ரல், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட 60 நிலையங்களில் உறுதிப்படுத்தப்பட்ட (confirm) டிக்கெட் வைத்துள்ளவர்களை மட்டுமே அனுமதிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில் நிலையங்களுக்கு வெளியே காத்திருப்பு பகுதியை அமைத்து, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் அங்கேயே தடுத்து நிறுத்தப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது.

News March 9, 2025

இதுபோன்று ஏமாறாதீர்கள் 3/3

image

மூதாட்டி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில், அந்த பணம் வேறு சில வங்கி கணக்குகளுக்கு சென்றுள்ளது. அவர்களை பிடித்து விசாரித்தால் மலேசிய முத்துக்குமரன் தான் இதெற்கெல்லாம் காரணம் என கோரஸாக சொல்ல, சைபர் கிரைம் போலீசார் மலேசிய முத்துராமனை கைது செய்தனர். இதையடுத்து மோசடி கும்பலிடமிருந்து ரூ.52.68 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோன்று ஏமாறாதீர்கள்!

News March 9, 2025

டிஜிட்டல் அரெஸ்ட்டை நம்பிய மூதாட்டி 2/3

image

உங்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். இல்லையெனில் நீங்கள் விசாரணைக்காக மும்பை வர வேண்டும் என அந்த போலீஸ் போலீஸ் அதிகாரி கூறியிருக்கிறார். மும்பை வர முடியாது சார் என அந்த மூதாட்டி கூறியதும், அப்போது உங்களை தற்சமயம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாகவும், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அனுப்புங்கள், நாங்கள் செக் பண்ணிட்டு திருப்பி அனுப்பிவிடுகிறோம் எனக்கூறி ரூ.4.67 கோடியை அபேஸ் செய்துள்ளனர்.

News March 9, 2025

மும்பை போலீஸ் எனக்கூறி ரூ.4.67 கோடியை இழந்த மூதாட்டி 1/3

image

சென்னை, அபிராமபுரத்தைச் சேர்ந்த இன்ஜினீயரான மூதாட்டி ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை டிராய் அதிகாரி என அறிமுகப்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “உங்கள் பெயரில் வந்துள்ள பார்சலில் போதைப்பொருள், போலி பாஸ்போர்ட்கள், புலித்தோல் வந்துள்ளன” எனக்கூறி மூதாட்டியிடம் நைசாக பேசி ரூ.4.67 கோடியை பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளனர்.

News March 9, 2025

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 8, 2025

தமிழ்நாடு பொது சுகாதார துறையில் சூப்பர் வேலை

image

தமிழ்நாடு பொது சுகாதார துறையில் 126 பணியிடங்கள் சென்னையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 8th, B.Sc, DMLT, M.Sc போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ.8,500- 21,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 11-03-2025. யூஸ் பண்ணிக்கோங்க. மறக்காம ஷேர் பண்ணுங்க.

News March 8, 2025

ரயில்கள் ரத்து – 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை (மார்ச்.9) காலை முதல் மாலை வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நேரத்தில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தாம்பரம் – பிராட்வே 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் – பிராட்வே 20 பேருந்துகள், பல்லாவரம் – செங்கல்பட்டு 5 பேருந்துகள் என 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க. 

News March 8, 2025

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கினார் முதல்வர் 

image

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்.8) கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 100 மகளிர்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!