India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மழை கொட்டி தீர்த்த நிலையில், இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சர்வதேச நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றுத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 11) லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், விட்டர் டீசல் ரூ.92.39 க்கும் விற்பனை.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த லிங்கை <
தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் ஏப்ரல் மாத இறுதி தொடங்கி மே மாதம் வரை வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, சென்னை திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை ஏற்படக்கூடும். இதனால், பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசௌகரியமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
சாலிகிராமத்தில் தனியாக வசித்து வந்த ஐடி ஊழியரின் வீடு இரண்டு நாட்களாக பூட்டி இருந்த நிலையில், கதவை உடைத்து பார்த்ததில் படுக்கை அறையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.அவரது உடலை போலீசார் மீட்டு கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த நேதாஜி என்றும் சாலிகிராமத்தில் 2 ஆண்டுகளாக வீடு ஒன்று வாடைக்கு எடுத்து ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
தாம்பரம் அருகே மணிமங்கலம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பாலகுமாரன் – வித்தியா தம்பதியர். நேற்று மாலை வித்தியா துணிகளை துவைத்து காய வைப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் இருந்த அவரின் இரண்டு வயது பெண் குழந்தை ஆருத்ரா தவறி கீழே விழுந்து உயிரிழந்தது. மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இன்றும், நாளையும் 21 – 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பி.எம். வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 12 மாத இலவச திறன்பயிற்சி வழங்கப்படுகிறது. கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் பயிற்சியில் மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை, ரூ.6,000 மானியம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044-25201163, 9946640017. ஷேர் பண்ணுங்க.
சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று (மார்.10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “உங்களின் ஆதரவு, வரவேற்புடன் சேர்ந்து எனது வெற்றிக்கு இறைவன் அருள்புரிந்தான். ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர். நான் சாதாரண மனிதன்தான். இன்று வரை எனது கால்களில் நடந்து, எனது கால்களிலேயே நான் நிற்கிறேன். 82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம். இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறேன்” என்றார்.
பெண் ஆடையணிந்து ஆண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பிக்பாஸ் பிரபலம் விக்ரமனின் வீடியோ இணையத்தில் கசிந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், அது சினிமா ஷூட்டிங் என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் விளக்கமளித்தார். படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விக்ரமனின் மனைவி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.