Chennai

News March 13, 2025

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

image

சென்னை திருமங்கலம் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் பாலமுருகன், மனைவி சுமதி (வழக்கறிஞர்), மகன்கள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 13, 2025

வரும் 19ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது

image

சென்னையில் வரும் மாா்ச் 19ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கான அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 12 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டா் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் 1.8 கி.மீ.,க்கு ரூ.76 வசூலிக்கின்றன. இந்நிலையில், ஆட்டோக்களில் கால்துறை சார்பில் QR கொடு கோடு ஒட்டப்படுகிறது. இவற்றை கண்டித்து, இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

சென்னையில் 100 இடங்களில் தமிழக பட்ஜெட் நேரலை

image

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் நாளை (மார்.12) செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 100 இடங்களில், பட்ஜெட் தாக்கலை நேரலை செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல், வரும் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட், பொது இடங்களில் பிரமாண்ட LED திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News March 13, 2025

லிஃப்டு அறுந்து விழுந்து ஊழியர் பலி

image

தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் (ஹயாத்) லிஃப்டு அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டல் ஊழியர்கள் பயன்படுத்தும் லிஃப்டை, தனியார் லிஃப்ட் நிறுவன ஊழியர்கள் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, லிஃப்ட் திடீரென அறுந்து கீழே விழ, உள்ளே இருந்த ஊழியர் ஒருவர் உடல் நசுங்கி பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 13, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (12.03.025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. 

News March 13, 2025

ஹயாத் ஓட்டலில் லிப்ட் விழுந்து ஒருவர் பலி

image

தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் தனியார் ஹோட்டலில் இன்று மாலை லிஃப்ட் அருந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பழுதான லிப்ட் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. லிப்டை சரி செய்ய முற்பட்டபோது அங்கு வேலை பார்த்த தொழிலாளி லிப்ட் அறுந்து விழுந்ததில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

News March 12, 2025

சென்னையின் டாப் 5 சிறப்புகள்

image

1. இந்தியாவிலேயே மிகப்பழமையான ஷாப்பிங் மால் ஸ்பென்சர் பிளாசா தான். 2. உலகிலேயே 2வது பெரிய நீதிமன்றம் நமது மெட்ராஸ் உயர் நீதிமன்றம். 3.கோயம்பேடு பேருந்து நிலையமே ஆசியாவின் பெரிய பேருந்து நிலையமாகும். ஆசியாவிலேயே பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம். 5. இந்தியாவிலேயே மக்களின் பார்வைக்கு உருவாக்கப்பட்ட முதல் விலங்கியல் பூங்கா வண்டலூர் விலங்கியல் பூங்கா தான். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 12, 2025

15 மண்டலங்களில் சார்ஜிங் நிலையங்கள்

image

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பசுமை எரிசக்தி கழகத்துடன் இணைந்து, 89 பார்க்கிங் இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மாநகராட்சி நிலங்களை அடையாளப்படுத்தியதற்கு பிறகு சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் கார், பைக்கிற்கு சார்ஜ் செய்யலாம்.

News March 12, 2025

‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே’ ரீல்ஸ் போட்டி

image

சென்னையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ‘செந்தமிழ் நாட்டு தமிழச்சி’ பாடலுக்கான ரீல்ஸ் போட்டி நடைபெறுகிறது. புதிய ஹூக் ஸ்டெப் உருவாக்கி #செந்தமிழ் நாட்டு தமிழச்சி’ என்ற ஹாஷ்டாக்குகளை பயன்படுத்தி சமூக ஊடக கணக்குகளில் பகிரவும். உங்கள் படைப்புகளை வரும் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சிறந்த படைப்புக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசு வழங்குகிறார்.

News March 12, 2025

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை

image

சென்னையில், தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில், 20,000 கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது. இவற்றில், பாரிமுனை, சௌகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது குறித்து புகார்கள் வந்துள்ளன. இந்த கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி சரி செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

error: Content is protected !!