Chennai

News February 12, 2025

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 12, 2025

சென்னையில் நாளை 25 புறநகர் ரயில்கள் ரத்து

image

பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப். 13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News February 12, 2025

1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து, வருகின்ற 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்தகங்களை தொடங்கி வைக்கிறார். சென்னையில் மட்டும் கொளத்தூர், தி.நகர், ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்படுகிறது. இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கிடைக்கும். ஷேர் செய்யுங்கள்

News February 12, 2025

ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் சீண்டல்

image

ராயபுரத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான தணிகைவேல் (44) என்பவர் கடந்த சில நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி அரசு பேருந்தில் மாணவி சென்றபோது, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சக பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் அவரை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். புகாரின் பேரில் தணிகைவேல் நேற்று (பிப்.11) ராயபுரம் போலீசார் கைது செய்தனர்.

News February 12, 2025

CMRL செயலியில் பார்க்கிங் பற்றி தெரிந்து கொள்ளலாம்

image

சென்னை மெட்ரோ ரயில் சேவை புதிய சிஎம் ஆரல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பார்க்கிங் உள்ளதா? என்பதை இந்த செயலியில் பார்க்கலாம். அதாவது, மெட்ரோ செயலியை ஓபன் செய்து மேலே இடதுபுறம் உள்ள மெனுவை கிளிக் செய்தால், அதில் 4ஆவது இடத்தில் பார்க்கிங் அவைலபிலிட்டி என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்தால், அனைத்து ஸ்டேஷன்களின் பெயர்களும் வரும். அதில், வாகனங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை அறியலாம்.

News February 12, 2025

டிப்ளமோ முடித்தவர்களுக்கு HP நிறுவனத்தில் வேலை

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே <>விண்ணப்பிக்கலாம்<<>>. ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 12, 2025

அதிரடியாக குறைந்த முட்டையின் விலை

image

சென்னையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் முட்டையின் சில்லறை விற்பனை விலையானது ரூ.5.00க்கு விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள பண்ணையில் கொள்முதல் செய்யப்படும் முட்டையின் விலையானது ரூ.4.65க்கு கொள்முதல் செய்யப்படுவதால், முட்டையின் விலை ரூ.5க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க

News February 12, 2025

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் இன்று (பிப்.12) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால், தேனாம்பேட்டை, போயஸ் கார்டன், எல்டாம்ஸ் சாலை, காமராஜர் சாலை, பார்த்தசாரதி பேட்டை மற்றும் கார்டன், பெரியார் சாலை, அண்ணா சாலை, அண்ணா நாகர், திருமுல்லைவாயல், தாமரைபாக்கம், கிழக்கு முகப்பேர், அரும்பாக்கம், MMDA காலனி, சூளைமேடு, 100 அடி சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

News February 11, 2025

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக இருங்கள். ஷேர் பண்ணுங்க

News February 11, 2025

முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பொய் பேசுகிறார்

image

சென்னை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பொய் பேசுகிறார். பீகார் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பீகார் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தவறான தகவலை தருகிறார். பீகார் உயர் நீதிமன்றம் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!