India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னையில் வாகன நிறுத்த தேவையை அறிந்து மேலாண்மை செய்யும் வகையில் வாகன நிறுத்தக் கொள்கை உருவாக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இதனால், பொதுமக்கள் கார்களை வாங்கும் போது வாகன நிறுத்தச் சான்று கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய (மார்ச்.18) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39 வருகிறது.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
சென்னை விமான நிலையத்தில் நாய் தொல்லை அதிகரித்திருப்பதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். தினசரி லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய நிலையில் நாய்கள் ஆங்காங்கே சுற்றித் திரிவதால் அச்சமாக உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு புளூ கிராஸ், விலங்கு நல வாரியத்துடன் இணைந்து 40க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
சென்னை கே.கே.நகரில் கணவன் உயிரிழந்த சில நிமிடங்களில் மனைவியும் உயிரிழந்தார். ஜீவானந்தம் தெருவில் மூர்த்தியும் (72) அவரது மனைவி (61) சாந்தியும் தனியாக வசித்து வந்தனர். கணவன் சுயநினைவின்றி மூர்ச்சையானதால் பக்கத்து தெருவில் வசிக்கும் மருமகன் கார்த்திக்கு சாந்தி தகவல் அளித்துள்ளார். அவர் வந்து பார்க்கும் போது கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் (மார்ச்17) மைதானத்தில் தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் ஈடுப்பட்டுவருகின்றனர்.
மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஷ்வா (20) என்பவர் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். தினமும் மின்சார ரெயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று வழக்கம்போல் விஷ்வா மின்சார ரெயிலில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, தாம்பரம் அருகே கூட்ட நெரிசல் காரணமாக எதிர்பாராத விதமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே விஷ்வா உயிரிழந்தார்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்காக மேலும் 32 ஓட்டுநர் இல்லா ரயில்களை அல்ஸ்டோம் தயாரிக்க வாய்ப்பு உள்ளது. ரூ.1,538 கோடி செலவில் 96 பெட்டிகள் கொண்ட ரயில்கள் உருவாக்க ஒப்பந்தம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரயில்களில் அதிக பாதுகாப்பு வசதிகள், USB சார்ஜிங் பாயிண்ட், மேம்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஆயிஷா (19) கல்லூரி 2ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 12ம் தேதி கல்லூரியின் இரண்டாவது தளத்தில் இருந்து கீழே குதித்தார்.ஆயிஷாவின் சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்ததும், அவரது இழப்பில் இருந்து மீண்டு வரமுடியாத ஆயிஷா, தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை திருவான்மியூரில் பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. தீராத நோய்களை தீர்க்கும் சக்தி படைத்தவர் என்பதால், இவருக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்று பெயர். சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து விபூதி பிரசாதம் உண்டால், தீராத நோய்கள், பாவங்கள் தீரும் அங்குள்ள வன்னி மரத்தை சுற்றி முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.