Chennai

News April 13, 2025

கிரேனில் இருந்து மரம் விழுந்து தொழிலாளி பலி

image

புழல் கதிர்வேடு பகுதியில், குஜராத்தை சேர்ந்த சஞ்சித் என்பவருக்கு சொந்தமான மர கிடங்கு உள்ளது.கதிர்வேடு விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் ராஜேஷ் என்கிற ஜான், 33.நேற்று மதியம், லாரியில் இருந்து கிரேன் வாயிலாக மரங்களை இறக்கும் போது திடீரென கிரேனில் இருந்த மரம் ஜான் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் தலை நசுங்கி பலியானார்.புழல் போலீசார் உடலை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 13, 2025

75 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல்

image

செங்குன்றம் அருகே சிரங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த 75வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். கடந்த 8 ம் தேதி, மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். மூதாட்டி கூச்சலிடவே வாலிபர் தப்பியோடினார். புகாரின் அடிப்படையில் விச்சூரை சேர்ந்த தமிழன்பன் சந்துரு (23) என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 12, 2025

இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியீடு

image

சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதியில் இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் விவரங்களை சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவைக்கு உடனடியாக அழைக்கலாம் எனவும் சென்னை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 12, 2025

கடன் தொல்லையை நீக்கும் கங்காதீசுவரர்

image

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி மிக விஷேசம். சென்னை புரசைவாக்கத்தில் பிரசித்திபெற்ற கங்காதீசுவரர் கோயில் உள்ளது. இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 12, 2025

கனிமங்கள் எடுத்து செல்ல ஆன்லைன் மூலம் அனுமதிச் சீட்டு

image

சென்னை மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணியில் கிடைக்கப்பெறும் மண், சக்கை கல் உள்ளிட்ட கனிமங்களை அப்புறப்படுத்துவதற்கு வரும் 28-ந் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சீட்டுகள் மூலம் கனிமங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது என சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

image

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <>லிங்கில் <<>>வரும் ஏப்ரல்.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்

News April 12, 2025

லாரி மோதி தொழிலாளி பலி

image

புழலை சேர்ந்தவர் மணி (54) லாரி ஓட்டுனர். இவரது லாரியில் மணியும் ரங்கன் (60) என்பவரும் மளிகைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை புழல் வழியாக திருத்தணிக்கு சென்றனர். அப்போது மழை பெய்ததால் மளிகை பொருட்கள் நனையாமல் இருக்க ரங்கன் லாரியின் பின் பக்கத்தில் நின்று தார்ப்பாயை இழுத்து கட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு லாரி ரங்கன் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News April 12, 2025

கிருஷ்ணா கால்வாயில் குளித்த வாலிபர் பலி

image

ஆவடி மணலி, சாலமன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (32). ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று மதியம், அவரது ஆட்டோவில் நண்பர்களான சுகுமார், சூர்யா, வேல்முருகன் ஆகியோருடன் ஆவடி கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். மாலை 4:55 மணியளவில் அங்கு அனைவரும் குளித்து கொண்டிருந்தபோது திடீரென கார்த்திக் மாயமானார். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் கார்த்திக் உடலை மீட்டனர். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 11, 2025

6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்

image

சென்னையில், 6ஆம் வகுப்பு மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து அத்துமீறி நுழைந்து, சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான சிறுமி நடந்த சம்பவங்களை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

News April 11, 2025

சென்னையில் வரும் 21ஆம் தேதி முதல் அமல்

image

விதிகளை மீறி கட்டுமான மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டினால் நாள் ஒன்றுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் விதிகளை மீறி கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். , கட்டட கழிவுகளை ஒப்படைப்பதில் 1 டன் வரை இலவசமாக கொடுக்கலாம். கழிவுகள் அதிக அளவு இருந்தால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

error: Content is protected !!