Chennai

News October 23, 2024

இளஞ்சிவப்பு ஆட்டோ: பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்

image

சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. இதில் பயன்பெற, 10ஆம் வகுப்பு முடித்து, 25-45 வயது வரையிலான ஓட்டுநர் உரிமம் உள்ள பெண்கள், விண்ணப்பங்களை ‘சமூக நல அலுவலர், 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை’ என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் பெற்று, நவ.23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 23, 2024

ரயில்களில் பட்டாசு எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்

image

பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்ற பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது. தீபாவளி நெருங்கும்போது, வியாபாரிகள் அல்லது பயணிகள் சிலர் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பார்கள். இதை தவிர்க்க கோரி, ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதுபோல, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

News October 23, 2024

பட்டாசு கடை அமைப்பதற்கு நாளை ஏலம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மூலம் இந்த ஏலம் நடைபெற உள்ளது. ஏலம், நாளை (அக்.24) மாலை 3 மணிக்கு நடைபெறும்/ ஏலம் எடுப்பவர்கள் நாளை மாலை 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News October 23, 2024

வடசென்னை ஐ.டி.ஐ.யில் சேர 30ஆம் தேதி கடைசி நாள்

image

வடசென்னை ஐ.டி.ஐ.,யில் சேர வரும் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமா படித்தவர்கள் பயிற்சியில் சேரலாம். சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிரோன் பைலட் உள்ளிட்ட ஓராண்டு மற்றும் 2 ஆண்டு பயிற்சிகள் உள்ளன. பயிற்சியின்போது, உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பயிற்சியில் சேர பயிற்சி கட்டணம் கிடையாது. விபரங்களுக்கு, 98941 92652, 94990 55653 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

News October 23, 2024

வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு, இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து, வேளச்சேரி ரயில் நிலைய அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், ரயில் நிலையத்தில் மோப்பநாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், ரயில் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

News October 23, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் அறையில் ரெய்டு

image

சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் அறையில் அமலாக்க துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்தியலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதன் அடிப்படையில், இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News October 23, 2024

டானா புயல் எதிரொலியால் 28 ரயில்கள் ரத்து

image

டானா புயல் எதிரொலி காரணமாக 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நண்பகல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சந்திராகச்சி செல்லும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை சென்னையில் இருந்து ஹவுரா செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News October 23, 2024

சென்னையில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

image

டானா புயல் காரணமாக சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதிகளில் நிலைய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று ‘டானா’ புயலாக உருவெடுக்க உள்ளது. அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக்.25ஆம் தேதி ஒடிசா பூரி – சாகர் தீவு இடையே கரையை கடக்கும்.

News October 23, 2024

250 ஆட்டோக்கள் பெண்களுக்காக இயக்கப்படும்

image

பெண்கள் பாதுகாப்பிற்காக இயக்கப்பட உள்ள இளஞ்சிவப்பு ஆட்டோக்களில் காவல்துறை உதவி எண்ணுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும்; 250 பெண்களுக்கு சிஎன்ஜி, ஹைபிரிட் ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தின் கீழ் தகுதி உடைய மகளிர் நவம்பர் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News October 23, 2024

முன்னெச்சரிக்கையாக 48,664 மர கிளைகள் அகற்றம் – மாநகராட்சி

image

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஜூலை முதல் அக்டோபர் 19 வரை சென்னையில் 2,708 மரங்களின் 48,664 கிளைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.