India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் சென்னை மக்கள் குடிக்கும் நீரை ஆய்வு செய்தனர். இதற்காக சென்னைப் பகுதிகளிலிருந்து 752 வீடுகளில் உபயோகிக்கப்படும் நீரினை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், 75% ‘E coli’ என்ற உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியா கலந்து இருக்கிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர். இது, டயரியாவை ஏற்படுத்துக் கூடியது என்பதால் கொதிக்க வைத்து குடிப்பது சிறந்ததாகும். ஷேர் பண்ணுங்க
பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் வரும் 26ஆம் தேதி தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது.
சென்னை அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இடம்பெறும் என பெருநகர வளா்ச்சிக் குழும (CMDA) உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தாா். நகரை மேம்படுத்த, குடியிருப்புப் பகுதிகளை தீவிரமாகக் கவனிக்க வேண்டும். மக்கள்தொகை 10 ஆண்டுகளில் 20% அதிகரித்துள்ளது. அரசின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, தொழிற்சாலை, ஐடி, குடியிருப்புகளை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
கொடுங்கையூரில் கல்லூரி மாணவர்கள் சிலர் வீட்டிலேயே மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் தயாரித்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை காவலர்கள் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். வெளியே வாங்கிய போதைப்பொருள் தரமில்லாததால், சௌகார்பேட்டையில் வேதிப்பொருட்கள் வாங்கி, வேதியியல் படித்து வரும் மாணவர் உதவியுடன் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக்டோபர் 29, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் அதிவிரைவு ரயில் இயக்கம். கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அக்டோபர் 29, நவம்பர் 4 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கம். மங்களூருவில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 29ஆம் தேதி அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது, ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரும் மக்களை எச்சரித்து வருகின்றனர். முதல் முறையாக பிடிபட்டால், ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். மேலும், தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என எச்சரிக்கை விடுத்தனர்.
திரு.வி.க.நகர் கிருஷ்ணதாஸ் சாலையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமை பார்வையிட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், கர்ப்பிணி தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.
சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “மக்களால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் திமுக கூட்டணி விரைவில் உடைய போகிறது என்று இவ்வளவு நாள் கற்பனையில் பேசியவர் தற்போது ஜோசியராக மாறி உள்ளார். விரக்தியின் எல்லைக்கு சென்றுள்ளார். திமுக கூட்டணி கொள்கைக்காக இணைந்த கூட்டணி. விவாதங்கள் கூட்டணிக்குள் இருக்கலாம், விரிசல் இல்லை” என்றார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்கிறது. இதன் காரணமாக இன்று (அக்.23) காலை 8 மணி முதல் நாளை (அக்.24) மாலை 4 மணி வரை தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், ஓட்டேரி, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.