India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவைகள் கடந்த 27 ஆகஸ்ட் 2023 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வேளச்சேரி – சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால், நாளை முதல் வழக்கம்போல் கடற்கரை – வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயங்கும் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை எழும்பூர் நீதிமன்றம் நவ.4-க்கு ஒத்திவைத்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீஸ் அண்மையில் தாக்கல் செய்தது. தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை வழங்குவதற்காக 28 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றப்பத்திரிகை நகல் பெறப்படாததால் வழக்கு விசாரனை ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை சமீபத்தில் சில இளைஞர்கள் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் வீலிங் செய்யும் காணொளி வெளியாகி வைரலானது. இது தொடர்பாகப் பேசியுள்ள முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, “வீலிங் என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்யும் இளைஞர்கள், அதனைத் தவிர்த்து, அங்கீகாரம் உள்ள விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
குரோம்பேட்டை ஆர்.பி.சாலையில் உள்ள தனியார் பள்ளி மற்றும் சிட்லப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2 பள்ளிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் அது புரளி என்பது தெரியவந்தது.
பட்டாசு வெடிக்கும்போது செய்யக்கூடாதவை: குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் அருகில் பட்டாசு வெடிக்க கூடாது. செல்லப்பிராணிகள் அருகில் பட்டாசு வெடிக்க கூடாது, பட்டாசுகளை குனிந்து வெடிக்க கூடாது, வெடிக்காத பட்டாசுகளுக்கு கையில் எடுக்க கூடாது. செய்ய கூடியவை: திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும், ராக்கெட்டுகளை சாய்த்து வைத்து வெடிக்க கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, 5 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வழக்கமான பேருந்து, சிறப்புப் பேருந்து என மொத்தம் 11,176 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேரும் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். வழக்கில் தொடர்புடைய 30 பேர் மீது, எழும்பூர் நீதிமன்றத்தில் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்திருந்தனர். தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை இன்று கைது செய்யப்பட்டவர்களிடம் வழங்க உள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், 234 சட்டப்பேரவைத் தொகுதி திமுக பார்வையாளர்களுடன் இன்று (அக்.28) ஆலோசனை நடத்துகிறார். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள் குறித்தும், சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும், அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். இதில், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் நவ.1ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.