India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாநகராட்சி பட்ஜெட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership) முறையில் அமைக்கப்படும். இதனால் வாகன நெரிசல்கள் குறைவதுடன் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கை ரிப்பன் கட்டிட வளாகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் வகையில் அவை அனைத்தும் படிப்படியாக இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியருக்கு பயணப்படி மற்றும் உணவுப்படி வழங்குதல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்படும் என புதிய அறிவிப்பு.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் கீழ் இயங்கும் 16 நகர்ப்புர சமுதாய நல மையங்கள் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் 3 மகப்பேறு மருத்துவமனைகள் என 19 மருத்துவமனைகளுக்கும் தலா ஒன்று வீதம் 19 கிருமிநாசினி புகைக்கருவிகள் (Fogger Machine) தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திடமிருந்து (TNMSC) கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், மண்டலம் 1,2,3, 4, 5, 7, 8, 11, 13 மற்றும் 14 ஆகிய பத்து மண்டலங்களில் தற்போது புதியதாக கட்டப்பட்டு வரும் நாய் இனக்கட்டுப்பாடு மையங்களில் கூடுதலாக வளர்ப்புப் பிராணிகளுக்கான மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. வளர்ப்பு பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சை வழங்க ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்தாண்டு சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடந்தாண்டு 4464 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது, அந்த தொகை தற்போது 5145 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 681 கோடி ரூபாய் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு உயர்வு. கடந்தாண்டு 262 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு 68 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வருவாய் துறையில் புதிதாக வரி செலுத்துபவர்களுக்கு QR code வசதி ஏற்படுத்தப்படும். சொத்துவரி மதிப்பீடு, பெயர் மாற்றம், திருத்தத்திற்கான இறுதி அறிவிப்புகள், புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமை, மக்கள் வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக QR Code வசதி செய்யப்படும். இதனால் எவ்வித சிரமம் இன்று உடனடியாக வரிகளை செலுத்த இயலும்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தெருநாய் கடியால் மக்கள் அவதி பெரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 4 ஆண்டு காலம் 900 எம்எல்டி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது 1110 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடை காலம் வரையில் இந்த தண்ணீர் போதுமானதாக இருக்கும் என கே என் நேரு தெரிவித்துள்ளார், சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் காரபாக்கம் கணபதி கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்
சென்னை மாநகராட்சி (2025-26) நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, பட்ஜெட்டை வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவா் சா்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார், மாநகராட்சியில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறித்து மேயர் பிரியா அறிவித்தார். இதில் கல்வி, சுகாதாரம், மழைநீர்வடிகால் துறை, பூங்கா உள்ளிட்ட துறைகளின் கீழ் உள்ளிட்ட திட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.