Chennai

News October 8, 2024

காய்ச்சல் ஏற்படும் பகுதிகளில் தீவிர நடவடிக்கை

image

சென்னையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் எங்கெல்லாம் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்படுகிறதோ, குறிப்பாக ஒரு தெரு அல்லது ஊரில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக அங்கு மருத்துவ முகாம் நடத்த உத்தரவிட்டு மருத்துவ முகங்கள் நடைபெற்று வருகிறது. அரசுக்கு உதவியாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மருத்துவ முகாம் நடத்தி வருகின்றன” என்றார்.

News October 8, 2024

வழக்கை விரைவில் முடிக்க போலீசார் தீவிரம்

image

ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும், குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட உள்ளது. இன்று காணொலி மூலம் 27 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். வழக்கு, சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்துக்கு விரைவில் மாறுகிறது. இந்த கொலை வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு என்பதால், இதனை விரைந்து முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

News October 8, 2024

மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து

image

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் திடிரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இதனால், அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News October 8, 2024

சென்னையில் சாரல் மழை

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. ராயபுரம், திருவொற்றியூர், அயனாவரம், பெரம்பூர், தேனாம்பேட்டை, தி.நகர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, அண்ணா நகர், கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், கோட்டூர்புரம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வரை சாரல் மழை பெய்து வருகிறது. எனவே, பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் குடையுடன் வெளியே செல்லுங்கள். உங்க ஏரியாவில்?

News October 7, 2024

சென்னை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

சென்னை மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 8489821971, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News October 7, 2024

குழந்தைகளின் படிப்பு செலவை காங்கிரஸ் ஏற்கும்

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை சென்னையில் அளித்த பேட்டியில்,விமான சாகசம் நிகழ்வின் போது உயிரிழந்த நபர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை தமிழக காங்கிரஸ் ஏற்கும். உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தமிழக காங்கிரஸ் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். குழந்தைகளின் கல்வி செலவை அறக்கட்டளை ஏற்கும். தமிழக அரசு 25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News October 7, 2024

மெட்ரோ ரயிலில் நான்கு லட்சம் பேர் பயணம்

image

இந்திய விமான படையின் 92 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்றைய தினம் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயணித்தனர்.

News October 7, 2024

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மாவட்டத்தில் இன்று (அக்.7) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், வெளியே செல்லும் மக்கள் குடையை எடுத்துச் செல்லுங்கள்.

News October 7, 2024

பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

image

மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மெரினாவில் நடந்த விமானப்படையின் வான் சாகச நிகழ்வைக் காண வந்த பலரும் வெயிலின் தாக்கம், கூட்ட நெரிசலில் சிக்கி 240 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனைகளில் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் இந்த சோக நிகழ்வு ஏற்பட்டது.

News October 6, 2024

சென்னையில் 230 பேர் மயக்கம்

image

சென்னை மெரினாவில் நடந்த விமானப்படையின் வான் சாகச நிகழ்வைக் காண வந்த பலரும் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 230 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. கூட்டநெரிசலில் சிக்கி மயக்கம் ஏற்பட்ட 230 பேரில் 93 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமந்தூரார், ராஜுவ்காந்தி, ராயப்பேட்டை மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!