Chennai

News November 3, 2024

ரூ.1,000 பஸ் பாஸ் விற்பனை 20% உயர்வு

image

சென்னையில் கொரோனா பாதிப்புக்கு முன், 1,000 ரூபாய் மாதாந்திர பேருந்து பாஸ் பெறுவது 1.50 லட்சமாக இருந்தது. பின், படிப்படியாக உயர்ந்தது. புறநகரில் வேலைக்கு செல்வோர் அதிகரிதது. இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட காரணங்களால், மாதாந்திர பயணத்திற்காக 1000 ரூபாய் பேருந்து பாஸ் பெறுவது தற்போது 96,000 கூடுதலாக அதாவது 20% அதிகரித்துள்ளது என்று போக்குவரத்துறை கூறியுள்ளது.

News November 3, 2024

விண்ணை முட்டும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் 

image

தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மதுரையில் இருந்து சென்னைக்கு சாதாரண நாட்களில் ஆம்னி பேருந்துகளில் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால், தற்போது மதுரையில் இருந்து சென்னைக்கு வர ரூ.1,500 முதல் ரூ.2,500 வரையிலும், படுத்து தூங்கி செல்லும் பேரூந்துகளில் ரூ.4,000 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

News November 3, 2024

திருநங்கை வாரியத்தில் உறுப்பினர் சேர்ப்பு

image

தமிழக அரசால், திருநங்கையருக்கான நலவாரியம் 2008இல் தொடங்கப்பட்டது. நல வாரியத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்றாண்டுகள் நிறைவடைந்தன. எனவே, வாரியத்தில் 2 புதிய அலுவல் சாரா உறுப்பினர்களை தேர்வு செய்யப்பட உள்ளன. எனவே, தகுதியான நபர்கள் தங்களது விபரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News November 3, 2024

தமிழக அரசு சார்பில் ரூ.4 கோடி மதிப்பில் ஆய்வகம்

image

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பேட்டி அளித்தார். அப்போது, “இந்தாண்டு டெங்கு நோய் கட்டுக்குள் இருக்கிறது. அதற்கு சுகாதார ஆய்வாளர்கள் மிகப்பெரிய காரணமாக திகழ்கின்றனர். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு சார்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சுகாதார ஆய்வகத்தை திறந்து வைத்திருக்கிறோம். இது, உலகளவிலான தரத்தை கொண்டு டெங்குவை தடுப்பதற்கு பல்வேறு வகைகளில் உதவி புரிவதாக அமைந்துள்ளது” என்றார்.

News November 3, 2024

இந்திய கடலோர காவல் படையில் வேலை

image

இந்திய கடலோர காவல் படையின் சென்னை மண்டலத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 12 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் <>விண்ணப்பித்துக் <<>>கொள்ளவும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தால் போதும். இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் பண்ணுங்க

News November 3, 2024

நேற்று ஒரே நாளில் 15 பேர் கைது

image

சென்னை காவல் துறையினர், நேற்று பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர். ஓட்டேரியில் காவலரிடம் தகராறு செய்த 4 பேர், அயனாவரம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவலரை தகாத வார்த்தையில் பேசிய 5 பேர், வண்ணாரப்பேட்டையில் கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர், எம்.கே.வி.நகரில் கத்தியை காட்டி மிரட்டிய நபர், ஆர்.கே.நகரில் தங்க நகை திருடிய சிறுமி மற்றும் அவரது தாய் கைது செய்ப்பட்டனர்.

News November 3, 2024

சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்

image

மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர், எந்தவொரு நபரையும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது என்றும், கழிவுநீரை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களின் (Sewage Tank) அறிவு புத்தகத்தில் வாகனத்தின் வகை, கழிவுநீர் அகற்றும் வாகனம் என்று பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News November 3, 2024

மதுரை, திருச்சியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்

image

இன்று (நவ.3) மதுரை, திருச்சியில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை திரும்ப வசதியாக மதுரையில் இருந்து நாளை மாலை 7.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். திருச்சியில் இருந்து நாளை இரவு 10.50 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News November 3, 2024

16 வயது சிறுமி கொலை: கணவன், மனைவி கைது 3/3

image

தீபாவளி தினத்தன்று, சிறுமி சரியாக வேலை செய்யவில்லை என நவாசும் அவரது நண்பரும் தாக்கியுள்ளனர். இதில், சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் உடலை கழிவறையில் வைத்துவிட்டு, சிறுமி கழிவறையில் தவறி விழுந்து இறந்ததாக கதை கட்டியுள்ளனர். துர்நாற்றம் வந்துவிடுமோ என ஊதுபத்தியை கொளுத்தி வைத்துவிட்டு உறவினரின் வீட்டுக்கு தப்பி சென்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News November 3, 2024

16 வயது சிறுமி கொலை: கணவன், மனைவி கைது 2/3

image

இந்த சிறுமிக்கு தந்தை இல்லை. தாய் மட்டுமே உள்ளார். குடும்ப சூழல் காரணமாக சிறுமி சென்னையில் தங்கி வீட்டு வேலை செய்து வந்தார். அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட காயங்கள் சிறுமி உடலில் இருந்தன. இதனால் அவர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.