India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விண்ணப்பித்த ரேஷன் கார்டு (ஸ்மார்ட்கார்டு ) கிடைக்கவில்லை என்றாலோ அல்லது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் அந்த <
சென்னையிலிருந்து 140 கி.மீ. தூரத்தில் உள்ள வேலூருக்கு காஞ்சிபுரம் வழியாக RRTS ரயில் சேவையை கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளது. இது மெட்ரோ ரயிலைவிட 3 மடங்கு வேகம் கொண்டது. பாலாஜி ரயில் ரோடு என்ற நிறுவனம் அதற்கான சாத்தியக்கூறுகளை தயாரித்து வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சென்னை – காஞ்சிபுரம் 25 நிமிடத்திலும், சென்னை – வேலூர் 1 மணி நேரத்திலும் சென்றடைய முடியும். ஷேர் செய்யுங்கள்
இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 30ஆம் தேதிக்கு மேல்தான் இந்த <
மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 4) பரவலாக மழை பெய்தது. சென்ட்ரல், எழும்பூர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, போரூர், ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில் மாலை பெய்ததா?
சென்னையில் இன்று தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், ஆலந்தூர், அடையாறு, ராயபுரம், தேனாம்பேட்டை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <
சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை கணிசமாக குறைத்துள்ளன என காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024 உடன் ஒப்பிடும்போது 03.08.2025 அன்றைய நிலவரப்படி இவ்வாண்டில் (2025) சாலை விபத்து இறப்புகள் 12% குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 03.08.2024 வரை 316 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இவ்வாண்டு அதே தேதி வரை ஒப்பிட்டு பார்க்கும்போது 278 உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது.
சென்னையில் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவான 35 புகார் மனுக்கள் மீதும் மேலும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு மண்டலங்களில் சுமார் 156 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.1.66கோடி மீட்கப்பட்டது. மேலும் நடப்பாண்டில் ரூ18.08கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என காவல்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிடிவாரண்ட் பிறப்பித்து 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டெல்லியில் இருப்பதாக அவரது தாய் மனு அளித்தார். மீரா மிதுனை கைது செய்து ஆக. 11-இல் ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னனை அருகே திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயில் திருமண தடை நீக்கும் புண்ணிய தலமாக உள்ளது. இங்கு மரத்தாலான கருமாரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. மரச்சிலை அம்மன் என பெயர்கொண்ட இந்த அம்மனிடம் வேண்டி கொண்டால், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் வழிபட வேண்டிய முக்கியமான அம்மன் கோயில். ஷேர் பண்ணுங்க
சென்னை ரத்தன் பஜாரில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு அலர்ஜி ஏற்பட்டு, வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கெட்டு போன பிரியாணியை வழங்கியதாக இளைஞரின் தாய் கூறியுள்ளார். பிரியாணி சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.