India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் மழை பாதிப்பு குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.12) ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் பேட்டியளித்த அவர், “கன மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி வரை எந்த பகுதியிலும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்” என்று கூறினார்.
சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். பின் பேட்டியளித்த அவர், “21 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து நடைபெறுகிறது. அக்டோபர் மாத மழையை கவனத்தில் கொண்டு கூடுதலாக மோட்டார்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மழை தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது” என்றார்.
திருவொற்றியூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளி நாளை திறக்கப்படுகிறது. 10, 11, 12ஆம் மாணவர்களுக்கான வகுப்பு நடைபெறும். ஒரு வாரம் தனியார் பள்ளியிலேயே இருந்து மருத்துவ குழு கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளும் எனவும் கோட்டாட்சியர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கோடம்பாக்கத்தில் தனியார் கல்லூரி நிர்வாகம், மத ரீதியான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, மாணவர்களை கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டி, இந்திய மாணவர் சங்கத்தினர், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 14இல் வடகடலோர மாவாட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சுமார் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பு குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், முதலில் தென்சென்னை, ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் மழை மெதுவாக குறைந்து பிறகு மத்திய வடசென்னையில் குறையும்; மீண்டும் இன்று இரவு தொடங்கி நாளை காலை வரை மழை பெய்யும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. 129 நிவாரண மையங்கள், 20 உணவு தயாரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. காலை 9.30 மணி நிலவரப்படி எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை எனவும் மழை பாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் காலை 6 மணி வரை சராசரியாக 2.5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6 செ.மீ., அடையாரில் 5 செ.மீ., ஆலந்தூர் மற்றும் பெருங்குடியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. மழை தொடர்பான அனைத்து புகார்கள், உதவிகளுக்கு 1913 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து ரயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாக வரும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜினில் பழுது ஏற்பட்டு கொல்லம் விரைவு ரயில் விழுப்புரம் அருகே நிற்பதால் சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம் ஆகி உள்ளது. மாற்று எஞ்சின் மூலம் ரயிலை இயக்க ரயில்வே அதிகாரிகள் தற்போது ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அமைந்தகரையில் 2ம் நிலை காவலராக உள்ள ராஜ்குமார் நேற்று இரவு பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த ஆறுமுகம் என்பவர் மது போதையில் தகராறு செய்துள்ளார்.இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜ்குமாரை கழுத்து மற்றும் இடுப்பில் ஆறுமுகம் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.காயமடைந்த ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,ஆறுமுகம் கைது செய்யப்பட்ட்டார்.
Sorry, no posts matched your criteria.