India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் நவ.21ஆம் தேதி முதல் வரும் ஜனவரி 20ஆம் தேதி வரை பயணிப்போருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் வகையில் இந்த குலுக்கல் முறை நடைபெறும். முதல் பரிசு பைக், 2ஆவது பரிசு ஸ்மார்ட் டிவி, 3ஆவது பரிசாக பிரிட்ஜ் வழங்கப்படும்.
கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சிகிச்சைக்கு வந்த 4 பேர் மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஆன்லைன் ரம்மி மற்றும் பிட்காயின் முதலீட்டில் ரூ.60 லட்சம் வரை பணத்தை இழந்த சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் சரண் குமார் (32) நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழிக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பி வைத்துவிட்டு, அவர் தற்கொலை செய்துள்ளதாகக் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும்,போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில், வரும் நவ.15ஆம் தேதி பௌர்ணமி, நவ.16, 17 வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. நவ.15ஆம் தேதி கிளாம்பக்கத்தில் இருந்து 460 பேருந்துகளும், 16ஆம் தேதி 245 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவியாக இருக்கும்.
சென்னையில், 46.36 சதுர மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய அனைத்து வசதிகளுடன் கூடிய பெண்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள், விரைவில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, கட்டப்பட்டு வரும் இந்த உடற்பயிற்சி கூடங்கள், 6 – 9 மாதங்கள் காலக்கெடுவுடன் கட்டப்படுகின்றன. இதில் பல்வேறு உடற்பயிற்சி வசதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. பெண்கள் இந்த உடற்பயிற்சி சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சென்னை பெருநகர காவல்துறை, பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து உதவி எண்களையும் நேற்று அறிவித்துள்ளது. அவை: குழந்தை பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் உதவிக்கு – 181, காவல் கட்டுப்பட்டு அறைக்கு – 100, சைபர் குற்றத்திற்கு – 1930, ரயில்வே போலீஸ் – 9962500500, இரவு பயணத்தின்போது பெண்கள் பாதுகாப்பு உதவி எண் – 1091 ஆகிய எண்களை அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த எண்களை நோட் பண்ணி வச்சுக்கோங்க.
கோவளம் அருகே 223 ஏக்கரில் ரூ.100 கோடியில் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைய உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. இந்த நந்தவனம் பாரம்பரிய பூங்காவில் 2 நட்சத்திர விடுதிகள், 4,000 வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சோலை வனம், விஹாரம், மைதானம் என 3 பிரிவுகளாக பூங்கா அமைக்கப்பட உள்ளது. இது சென்னைக்கு மற்றுமொரு சுற்றுலா தலமாக அமையும்.
சென்னையில் 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. சென்னையில் விழா எங்கு? எப்போது? நடைபெறும் என்பதை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கேற்றன. உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மழை பாதிப்பு குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.12) ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் பேட்டியளித்த அவர், “கன மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி வரை எந்த பகுதியிலும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்” என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.