India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது எனவும், ஆனால் யாரும் சொல்லாத விஷயத்தை விஜய் அழுத்தமாக சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார் பாஜக பிரமுகர் சரத்குமார். மேலும், விஜய்யை போல திரையுலகில் மிகவும் உச்சத்தில் இருந்த போதுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். பொறுப்புடன் இருக்க வேண்டுமென பாஜகவில் இணைந்தேன். பொறுப்பு எதிர்பார்த்து இணையவில்லை என தெரிவித்தார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்று சென்னை பெருங்களத்தூர் மேம்பாலத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் மேம்பாலத்தில் இருந்து குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் முன்னறிவிப்பு இன்றி இன்று 10 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி செல்ல வேண்டிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூரு, திருவனந்தபுரம், புவனேஸ்வர், கொல்கத்தா, சிலிகுரியிலிருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. முன்பதிவு செய்து பயணிக்க இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, போக்குவரத்து மற்றும் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான உயர்நிலை ஆய்வுக் கூட்டம் துணை முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டிய சாலைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும், தங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், வரும் சனி மற்றும் ஞாயிறு (நவ.16, 17) வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர் பதிவு, வாக்காளர் பெயர் திருத்தம், மற்றும் பெயர் நீக்கம் போன்ற அனைத்து சேவைகளுக்காக நடைபெறுகிறது. QR கோடு ஸ்கேன் செய்து இணையத்திலும் படிவத்தை சமர்ப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பித்தப்பை கல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் மரணம் அடைந்துள்ளார். மருத்துவர்கள் இல்லாததே விக்னேஷ் உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மார்ட்டினுக்கு தொடர்புடைய ரூ.451 கோடி சொத்துகளை முடக்கிய நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெறுகிறது. விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈட்டியது தொடர்பாக வருமான வரித்துறையினர் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் அதிகபட்சமாக கத்திப்பாரா சந்திப்பை GST சாலையுடன் இணைக்கும் பகுதிகளில் 223 விபத்துகள் நடந்துள்ளன. மதுரவாயலில் 143 விபத்துகளும், கோயம்பேட்டில் 104 விபத்துகள் நடந்திருக்கின்றன. பூந்தமல்லி ஹைரோடு, அண்ணா ஆர்ச்சையொட்டியுள்ள பகுதிகளில் 190 விபத்துகள், நேப்பியர் பாலத்தில் 155 விபத்துகள் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அதிவேகமாகவும், தவறான பாதையில் வாகனங்களை இயக்குவதும்தான்காரணம்.
சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நவ.19, 26, டிச.3, 10, 17, 24 , 31, ஜன.7, 14 ஆகிய தேதிகளில் சென்ட்ரலிருந்து இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2:30 மணிக்கு கொல்லம் சென்றடையும். இதேபோல், நவ.20, 27, டிச.4, 11, 18, 25, ஜன.1, 8, 15 ஆகிய தேதிகளில் கொல்லத்திலிருந்து மாலை 4:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:35 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
சென்னை பெருநகர காவல்துறை, பொதுமக்களிடம் சில வேண்டுகோளை விடுத்துள்ளது. அதன்படி, OTP-ஐ பகிர்ந்துகொள்ளக்கூடாது. கிரெடிட் கார்டு விவரங்களை தேவையில்லாமல் பகிர வேண்டாம். சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சைபர் குற்றப் புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.