India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, கோயம்பேடு சந்தையில் 1 கிலோ பூண்டு ரூ. 450க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 1 கிலோ ரூ.420 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது வரத்து குறைந்துள்ளதால் 30 ரூபாய் அதிகரித்து இன்று 1 கிலோ ரூ.450க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திடீர் வெளியேற்றத்தால், வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு, கிலோ கணக்கில் வாங்க முடியாமல் கிராம் கணக்கில் வாங்கிச் சென்றனர்.
மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக ராயபுரத்தைச் சேர்ந்த பிரபல கானா பாடகி இசைவாணி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ‘I Am Sorry ஐயப்பா’ என்ற விழிப்புணர்வு பாடலை பாடியதாகவும், அதன்பின் தமது செல்போனை தொடர்பு கொண்டு மர்ம நபர்கள் சிலர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (C-DAC) உள்ள 125 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு வருடத்திற்கு ரூ.3.2 லட்சம் முதல் தொடங்கி ரூ.22.9 லட்சம் வரை வழங்கப்படும். விரும்புகிறவர்கள் <
எண்ணூரைச் சேர்ந்த ரவுடி பாலா (எ) யுவராஜ் கொலை செய்யப்பட்டார். குற்ற வழக்குகளில் தொடர்புள்ள பாலா, நேற்றிரவு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தனது நண்பர்களுடன் எண்ணூர் பகுதியில் உள்ள சூர்யா என்பவரது வீட்டிற்கு வெளியே அமர்ந்து மது அருந்தியுள்ளார். ஏற்கெனவே, அவருக்கும் நண்பர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது, பாலாவை நண்பர்கள் வெட்டி கொலை செய்தனர்.
உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது குளிர் கால அட்டவணையில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் வாராந்திர விமானங்களின் எண்ணிக்கையை 107ல் இருந்து 140 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் வெற்றியை, நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதோடு, வயநாடு தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்க சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் கால அவகாசம் 10.12.2024 அன்று வரையில் நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமுல்லைவாயிலில், ரயில் மோதி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜே.ஜே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணிபுரிந்த ஜோதி காமாட்சி (42), நேற்று தண்டவாளத்தைக் கடந்தபோது அரக்கோணம் ரயில் மோதி உயிரிழந்தார். 2017ஆம் ஆண்டு ஜோதி காமாட்சியின் கணவர் மாரடைப்பால் காலமான நிலையில், தனது 12 வயது மகனுடன் அவர் வசித்து வந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.