Chennai

News November 23, 2024

சென்னையில் இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. SHARE பண்ணுங்க. 

News November 22, 2024

மாநாட்டிற்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து

image

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நிலங்கள் கொடுத்த விவசாயிகளுக்கு நாளை (நவ.23) காலை 10.00 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் விருந்து அளிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் கட்சி நிர்வாகிகளுக்கு நாளை அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

News November 22, 2024

தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலிறுத்தால் 

image

சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக்கடைகளில் துவரம்பருப்பு வினியோகிக்கப்படவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு தடையின்றியும், தாமதமின்றியும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

News November 22, 2024

மருத்துவரை தாக்கிய இளைஞரின் பிணை மனு தள்ளுபடி

image

சென்னை கிண்டி கலைஞர் மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய விக்னேஷின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். சில நாட்களுக்கு முன்பு கிண்டியில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய வழக்கில் விக்னேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

News November 22, 2024

கணித திறமை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் 

image

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் 5 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கான கணித திறமை தேர்வு வரும் ஜன- 5ம் தேதி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க டிசம்பர்- 20க்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மாணவ, மாணவியரின் கணித திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

News November 22, 2024

வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் இன்று (நவ.22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 22, 2024

பராமரிப்பு பணி காரணமாக 28 ரயில் சேவைகள் ரத்து

image

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள், தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக, கடற்கரையில் இருந்து புறப்படும் 14 ரயில்கள், தாம்பரத்தில் இருந்து புறப்படும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற 200 ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படுவதைவிட 5 – 10 நிமிஷம் தாமதமாக இயக்கப்படும். ஷேர் செய்யுங்கள்.

News November 22, 2024

வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

image

சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு, அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக, Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 30ஆம் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் இந்த முகாமானது நடைபெற உள்ளது.

News November 22, 2024

பைக் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து

image

ஓ.எம்.ஆர். சாலை சோழிங்கநல்லூர் பகுதியில், நேற்று சாலையின் எதிர் திசையில் சென்ற இருசக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பைக்கில் சென்ற சோழிங்கநல்லூரைச் சேர்ந்த முருகன் (55), நாகராஜ் (48) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News November 22, 2024

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் இன்று (நவ.22) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு நடைபெற உள்ளது. அதனால், பெரும்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, பார்க் டவுன், மண்ணடி, திருமுல்லைவாயல், ஈச்சம்பாக்கம், கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். பொதுமக்கள் இந்த அறிவிப்பை ஏற்று, அதற்கேற்றவாறு தங்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!