India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருங்குழி பேரூராட்சி அருகே, இரும்பு கம்பி ஏற்றி சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. கம்பி ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென மோதியது. இதில், பேருந்தின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. ஓட்டுநர், நடத்துநர் பெரும் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர். விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் அடைந்தனர்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் நாய்கள் கருத்தடை செய்வதற்கான மையம் நவீனமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாய் கருத்தடை அறுவை சிகிச்சை ஆண்டுக்கு 27 ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க, மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் கடந்த அக்டோபர் மாதம் பூந்தமல்லி பணிமனையில் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ரயில் டிசம்பர் மாதம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், ஓட்டுநர் இல்லாத மேலும் 9 மெட்ரோ ரயில்கள் மார்ச் மாதத்திற்குள் ஒப்படைக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உங்கள் கருத்து?
மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தப்பட்ட நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டன. இதில் முதல் கட்டமாக 51 பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டங்களில் இதுவரை 331 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாகி குடை எடுத்துச் செல்லுங்கள்.
சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணா சாலை, மாம்பலம், அம்பத்தூர், பாடி, கொரட்டூர், நுங்கம்பாக்கம், மாதவரம், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், பணிக்கு செல்வோர் மழையில் நனைந்தபடி சென்றனர். காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள், இதில் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் முடிக்க திட்டம்இப்பணியில் சாலையின் மையத்தில் 1.2 மீட்டர் அகலத்திற்கு தடுப்புச் சுவர், அதனை அடுத்து இருபுறமும் 11 மீட்டர் அகலத்திற்கு தார் சாலை, அடுத்து 1.65 மீட்டர் அகலத்திற்கு பேவர் பிளாக் தளம் மற்றும் 2 மீட்டர் அகலத்திற்கு மழைநீர் வடிகாலுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட உள்ளன
சென்னையில் இன்று (நவ.7) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால், காலை 9 மணி – மதியம் 2 மணி வரை வில்லிவாக்கம், அண்ணா சாலை பகுதி, பஜார் சாலை, ஆலந்தூர் சாலை, சாஸ்திரி நகர், சிஐடி நகர், 70 அடி சாலை, பழைய மாம்பலம் ரோடு, கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, திடீர் நகர், சின்னமலை, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், மாடம்பாக்கம், சோழிங்கநல்லூர், எழும்பூர் உள்பட பல இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. ஷேர் பண்ணுங்க
நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.