Chennai

News November 24, 2024

சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

image

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.

News November 24, 2024

சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

News November 24, 2024

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சேவை அதிகரிப்பு

image

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது குளிர் கால அட்டவணையில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் வாராந்திர விமானங்களின் எண்ணிக்கையை 107ல் இருந்து 140 ஆக அதிகரித்துள்ளது.

News November 23, 2024

காங்கிரஸ் வெற்றி கொண்டாட்டம்

image

சென்னை காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் வெற்றியை, நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதோடு, வயநாடு தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார். 

News November 23, 2024

இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்; விண்ணப்பிக்க  காலம் நீட்டிப்பு 

image

சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்க சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் கால அவகாசம் 10.12.2024 அன்று வரையில் நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

News November 23, 2024

ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் உயிரிழப்பு

image

திருமுல்லைவாயிலில், ரயில் மோதி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜே.ஜே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணிபுரிந்த ஜோதி காமாட்சி (42), நேற்று தண்டவாளத்தைக் கடந்தபோது அரக்கோணம் ரயில் மோதி உயிரிழந்தார். 2017ஆம் ஆண்டு ஜோதி காமாட்சியின் கணவர் மாரடைப்பால் காலமான நிலையில், தனது 12 வயது மகனுடன் அவர் வசித்து வந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 23, 2024

மனநல மருத்துவ சிறப்பு முகாம்: நோட் பண்ணிக்கோங்க

image

செம்பியம், தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு, ஜாபர்கான்பேட்டை, முகலிவாக்கம், கோட்டூர்புரம், சத்தியமூர்த்தி நகர், திருவான்மியூர், மாதவரம், அயனாவரம், லட்சுமிபுரம், சைதாப்பேட்டை, கிழக்கு முகப்பேர், ஷெனாய் நகர், இ.சி.ஆர்., எம்.எம்.ஏ. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மனநல மருத்துவ சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்.

News November 23, 2024

பெண்கள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பம் வரவேற்பு

image

சென்னையில் செயல்படும் பெண்களுக்கான சேவை மையத்தில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, சென்னையில் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் காலியாக உள்ள வழக்கு பணியாளர் இடத்திற்கு, சமூக பணியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் chennai.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

News November 23, 2024

நாளை முதல் நவ.28ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து

image

எழும்பூர் – விழுப்புரம் இடையே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நாளை (நவ.24) முதல் நவ.28ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிற்பகல் 13.20 மணி முதல் பிற்பகல் 16.20 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News November 23, 2024

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

image

சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு நவ.27, 28 ஆகிய தேதிகளில் 6 செ.மீ முதல் 12 செ.மீ வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு அந்த தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் மழை தொடங்கும் எனவும் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!