India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால் (95) வயது மூப்பு காரணமாக நேற்று (நவ. 24) காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரின் உயிர் பிரிந்தது. ரஜினிகாந்த் நடித்த ‘நான் மகான் அல்ல’, விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவையின் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம், இசை விழா – விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கி கௌரவித்தார். இதில், முத்தமிழ்ப் பேரவையின் தலைவர் ஜி.ராமானுஜம், செயலாளர் இயக்குநர் பி.அமிர்தம் ஆகியோர் உள்ளனர்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீரிருப்பு 45.54%ஆக உள்ளது. மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 5.354 டிஎம்சி நீரிருப்பு உள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2338 மி. கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் நீரிருப்பு 114 மில்லியன் கன அடியாகவும், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 303 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
சென்னை அமைந்தகரை மேத்தா நகர் சதாசிவ மேத்தா தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த அக்.31 ஆம் தேதி சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான நிஷாத், அவரது மனைவி நதியா, லோகாஷ், ஜெயசக்தி, சீமா, மகேஸ்வரி ஆகிய 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை எண்ணூரில் ரவுடி பாலா என்கிற யுவராஜ் கொலை செய்யப்பட்ட 15 நிமிடத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புள்ள பாலா (எ) யுவராஜ், நேற்று இரவு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். ஏற்கனவே முன்விரோதம் இருந்த பாலாவை நண்பர்கள் கொலை செய்தனர். இதனையடுத்து, கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, கோயம்பேடு சந்தையில் 1 கிலோ பூண்டு ரூ. 450க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 1 கிலோ ரூ.420 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது வரத்து குறைந்துள்ளதால் 30 ரூபாய் அதிகரித்து இன்று 1 கிலோ ரூ.450க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திடீர் வெளியேற்றத்தால், வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு, கிலோ கணக்கில் வாங்க முடியாமல் கிராம் கணக்கில் வாங்கிச் சென்றனர்.
மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக ராயபுரத்தைச் சேர்ந்த பிரபல கானா பாடகி இசைவாணி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ‘I Am Sorry ஐயப்பா’ என்ற விழிப்புணர்வு பாடலை பாடியதாகவும், அதன்பின் தமது செல்போனை தொடர்பு கொண்டு மர்ம நபர்கள் சிலர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (C-DAC) உள்ள 125 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு வருடத்திற்கு ரூ.3.2 லட்சம் முதல் தொடங்கி ரூ.22.9 லட்சம் வரை வழங்கப்படும். விரும்புகிறவர்கள் <
எண்ணூரைச் சேர்ந்த ரவுடி பாலா (எ) யுவராஜ் கொலை செய்யப்பட்டார். குற்ற வழக்குகளில் தொடர்புள்ள பாலா, நேற்றிரவு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தனது நண்பர்களுடன் எண்ணூர் பகுதியில் உள்ள சூர்யா என்பவரது வீட்டிற்கு வெளியே அமர்ந்து மது அருந்தியுள்ளார். ஏற்கெனவே, அவருக்கும் நண்பர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது, பாலாவை நண்பர்கள் வெட்டி கொலை செய்தனர்.
Sorry, no posts matched your criteria.