India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. திருவல்லிக்கேணி, எழும்பூர், வேப்பேரி, கீழ்பாக்கம், சென்ட்ரல், சாந்தோம், கோடம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு, தேனாம்பேட்டை, தி.நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், CIT நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உங்க ஏரியாவில் மழையா?
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு, சென்னைக்கு தென்கிழக்கே 840 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு இன்று (நவ.26) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இது, தமிழக கடற்கரையை நோக்கி மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் நகா்ந்து வருகிறது. சென்னையில் நவ.27, 28, 29 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் செய்யுங்க
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் நகருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையிலிருந்து கிழக்கு- தென்கிழக்கு திசையில் 1000 கி.மீ தொலைவிலும், நாகையிலிருந்து 810 கி.மீ தொலைவிலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வரும் 29ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நாளை (26.11.2024) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை, தேனாம்பேட்டை, போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை பகுதிகள், ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீத்தாம்மாள் காலனி பகுதிகள், கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவத்சலம் தெரு, அப்பாதுரை தெரு, ஆர்.டி.ஓ.டி., கதீட்ரல் சாலை ஆகிய பகுதிகளில் மின்தடை.
சென்னை பனகல் பார்க் பகுதியில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் இன்று(நவ.25) முதல் டிச.1ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே இந்த மாற்றத்திற்கு வாகன ஓட்டுநர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பேசிய அவர், சென்னையை சேர்ந்த ‘கூடுகள் ’அறக்கட்டளை, சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை பெருக்க, இந்த அமைப்பு நான்கு வருடத்தில் 10,000 கூடுகளை சேகரித்துள்ளது. இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டால், சிட்டுக்குருவி கட்டாயம் மீண்டும் நமது வாழ்க்கையின் அங்கமாக ஆகிவிடும் என்றார்.
பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால் (95) வயது மூப்பு காரணமாக நேற்று (நவ. 24) காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரின் உயிர் பிரிந்தது. ரஜினிகாந்த் நடித்த ‘நான் மகான் அல்ல’, விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவையின் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம், இசை விழா – விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கி கௌரவித்தார். இதில், முத்தமிழ்ப் பேரவையின் தலைவர் ஜி.ராமானுஜம், செயலாளர் இயக்குநர் பி.அமிர்தம் ஆகியோர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.