Chennai

News November 8, 2024

பணியிடத் துன்புறுத்தலா? இந்த எண்ணை அழையுங்க

image

பெருநகர சென்னை காவல்துறையானது பெண்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாக வேலை செய்ய வேண்டுமென்பதற்காக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பணியிட துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள், உயர் அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் 181 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாய்கள் கருத்தடை மையம்

image

சென்னையில் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ளன நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தடுப்பூசி மையம், உயிரிழந்த செல்லப் பிராணிகளை எரியூட்ட தகனமேடை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

News November 8, 2024

கடந்த 15 நாட்களாக அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ’

image

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ விழி வெண்படல அழற்சி அதிகரித்து வருகிறது. இதற்கு, சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள கூடாது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கண் மருத்துவமனைகளில் 15% வரை நோயாளிகள் அதிகரித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் கண்களைப் பார்த்தால் மெட்ராஸ் ஐ பரவும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது மிகவும் தவறானது. தொற்று பதித்தவர்கள் பயன்படுத்திய பொருளை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஷேர் பண்ணுங்க

News November 8, 2024

13 ஆண்டுகளுக்குப் பின் பீச் வாலிபால் போட்டி

image

13 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் வரும் 21ஆம் தேதி சர்வதேச பீச் வாலிபால் போட்டி நடைபெற உள்ளது. வரும் 21ஆம் தேதி தொடங்க உள்ள இப்போட்டியில், 40 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஈ.சி.ஆர். அருகே உள்ள பீச் ரிசார்ட்டில் 21ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை இந்த பீச் வாலிபால் போட்டி நடைபெற உள்ளது. 40 நாடுகள் கலந்து கொள்ள உள்ளதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

News November 8, 2024

சென்னை பெருநகர குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்

image

பெருநகர சென்னை குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் பொதுமக்கள் உடனடியாக கட்டணமில்லா தேசிய உதவி எண் 14420-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், மீறி மனிதர்களைக் கொண்டு கழிவு நீரை அகற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

சென்னையில் 3 கேஸ் சிலிண்டர்கள் திருட்டு

image

வியாசர்பாடி, ரத்தினம் தெருவைச் சேர்ந்த சத்யநாதன், வியாசர்பாடி, முத்து முதலி தெருவில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, தாழ்பாள் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 3 சிலிண்டர்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, ரத்தினம் அளித்த புகாரின்பேரில், வியாசர்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 7, 2024

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 7, 2024

SDPI கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம்

image

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி SDPI கட்சி சார்பில் ஆழ்வார்பேட்டை, ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து, நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அமரன் திரைப்படம் இருப்பதாக, மாநில செயலாளர் கரீம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

News November 7, 2024

மெத்தம்பெட்டமைன் சப்ளை செய்த பெண் கைது

image

சென்னையில் பப்களுக்கு செல்லும் இளைஞர், இளம்பெண்களுக்கு மெத்தம்பெட்டமைன் சப்ளை செய்த மணலி பகுதியைச் சேர்ந்த சகிமா மௌபியாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்து 7 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான சகிமா மௌபியாவின் தந்தை அக்பர் அலி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.

News November 7, 2024

லாரி மீது மோதி உருக்குலைந்த அரசு பேருந்து

image

சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருங்குழி பேரூராட்சி அருகே, இரும்பு கம்பி ஏற்றி சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. கம்பி ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென மோதியது. இதில், பேருந்தின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. ஓட்டுநர், நடத்துநர் பெரும் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர். விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் அடைந்தனர்.