India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை SRM கல்லுாரியில் படித்து வந்த மோஷிக் (22), தனது நண்பர் ஷாஜனின் (23) பிறந்தநாளை கொண்டாட நண்பர்கள் 10 பேர் உடன் புதுச்சேரி ரெஸ்டோ பாருக்கு சென்றார். அங்கு, ஊழியர்கள், பவுன்சர்கள் உடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி, பார் ஊழியர் அசோக்ராஜ், மோஷிக்கை கத்தியால் குத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். விசாரணையில், மோஷிக் குடிப்பழக்கம் இல்லாதவர் என்பதும் வீட்டிற்க்கு ஒரே மகன் என்பதும் தெரியவந்தது.
நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் ஜெயராமன், பாலமுருகன், முருகப்பெருமான் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூனில் பெருமாள், ஜெயராமனை கொலை செய்துள்ளார். போலீசில் சிக்காமல் இருக்கா ஜெயராமனின் உடலை காரில் சென்னையில் இருந்து கோவைக்கு எடுத்து பாலமுருகனின் உதவியோடு கிணற்றில் வீசினர். பின் இருவரும் போலீசில் சரணடைந்தனர். மேலும், இக்கொலைக்கு பலரும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் சுமார் 2,000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தல் இன்று (ஆக.10) நடைபெற்றது. தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட்ட நிலையில் சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் ஆர்த்தி கணேஷ் போட்டியிட்டார். இந்நிலையில் தலைவர் பதவிக்கு சின்னத்திரை வெற்றி அணி சார்பாக போட்டியிட்ட நடிகர் பரத் 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை அருகே அம்பத்தூரில் வீட்டு இணைப்பு ஒன்றுக்கு அண்மையில் பலமடங்கு மின்கட்டணம் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சரியான நேரத்தில் மின் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மின்கணக்கீட்டு பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், நான்குசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி. மியூசிக் அகடாமி, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகளின் வழித்தடங்களில் மாற்றம் செய்துள்ளனர்.
பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு MBA, MMS, PGDBA, PGDBM முடித்தவர்கள் <
சென்னையில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <
சென்னை புறநகர் பகுதிகளில் பெருநகர மாநகராட்சி தனியார் அமைப்புகளுடன் இணைந்து, இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள பேருந்து நிலையம் அருகே இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமை மேயர் பிரியா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இம்முகாமில் காய்ச்சல், சளி மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொன்னேரி, கவரப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுகின்றன. இதனால் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல், சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை – சென்ட்ரல், கடற்கரை – கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி – கடற்கரை, சென்ட்ரல் – ஆவடி இடையே இன்று மற்றும் நாளை (ஆகஸ்ட் 10, 11) 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் – செங்கோட்டை, சென்ட்ரல் – போத்தனூர், தாம்பரம் – நாகர்கோயில், மங்களூரு – திருவனந்தபுரம் ஆகிய 4 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு தொடங்விட்டதால் உடனே புக் பண்ணுங்க. இந்த விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். <<17358920>>தொடர்ச்சி<<>>
Sorry, no posts matched your criteria.