India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் என்பவர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வந்தார். இவர் மீது 2021-ல் இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். பின் அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் கெபிராஜ் குற்றவானி என தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
79-வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடபட உள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க முயற்சி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையான நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நாளை (ஆக.12) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள். கோடம்பாக்கம், டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை பவர் ஹவுஸ் முதல் ரயில்வே டிராக் வரை, இன்பராஜபுரம், பஜனை கோயில் தெரு, வரதராஜப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர் முழுப் பகுதி, ரங்கராஜபுரம் பகுதி, சூளைமேடு, துரைசாமி சாலை, சுப்புராயன் தெரு, காமராஜர் காலனி 1 முதல் 8வது தெரு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. (<<17372710>>தொடர்ச்சி<<>>)
பெருங்குடி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செக்ரடேரியட் காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்க காலனி, அம்பத்தூர் தொழிற்பேட்டை: தெற்கு கட்டம், முகப்பேர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை I, 2வது பிரதான சாலை, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, கல்யாணி எஸ்டேட் பகுதியில் மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில், தெரு நாய்களுக்கு ஆன்டி-ரேபிஸ் மற்றும் ஒட்டுண்ணி மருந்து என 2 வகை தடுப்பூசிகள் செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கால்நடை மருத்துவ குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கு சென்று, நாய்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கோடு, நேற்று (ஆகஸ்ட் 10) முதல் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
myaadhaar என்ற இணையதளத்திற்கு சென்று Document Update என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதற்குள் Click to Submit என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விவரங்களை கொடுங்கள். Address Proof-க்கான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். 2026 ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை இதனை இலவசமாக செய்யலாம். இது கடினமாக இருந்தால் இ-சேவை மையங்களுக்கு சென்றும் செய்து கொள்ளலாம். <
சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையான ICF-இல் 1,010 காலி பணியிடங்கள் உள்ளன. கார்பெண்டர், பெயிண்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 5.30 மணிக்குள் இந்த <
சென்னை SRM கல்லுாரியில் படித்து வந்த மோஷிக் (22), தனது நண்பர் ஷாஜனின் (23) பிறந்தநாளை கொண்டாட நண்பர்கள் 10 பேர் உடன் புதுச்சேரி ரெஸ்டோ பாருக்கு சென்றார். அங்கு, ஊழியர்கள், பவுன்சர்கள் உடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி, பார் ஊழியர் அசோக்ராஜ், மோஷிக்கை கத்தியால் குத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். விசாரணையில், மோஷிக் குடிப்பழக்கம் இல்லாதவர் என்பதும் வீட்டிற்க்கு ஒரே மகன் என்பதும் தெரியவந்தது.
நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் ஜெயராமன், பாலமுருகன், முருகப்பெருமான் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூனில் பெருமாள், ஜெயராமனை கொலை செய்துள்ளார். போலீசில் சிக்காமல் இருக்கா ஜெயராமனின் உடலை காரில் சென்னையில் இருந்து கோவைக்கு எடுத்து பாலமுருகனின் உதவியோடு கிணற்றில் வீசினர். பின் இருவரும் போலீசில் சரணடைந்தனர். மேலும், இக்கொலைக்கு பலரும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.