India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக, அதிமுக எதிர்க்கட்சியினர் யார் அந்த சார்? என்ற பேச்சுடன் சட்டப்பேரவைக்கு வந்த நிலையில், இன்று (ஜன.8) 3ஆவது நாளாக சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்தனர். குறிப்பாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தது அனைவரையயும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து உங்கள் கருத்து?
புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையம் நோக்கி, கார் ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருக்கிறது. காரை லட்சுமி காந்தன் என்ற இளைஞர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கார் மீது லாரி ஒன்று மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த இளைஞர் காருக்குள் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட தீயணைப்பு துறையினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
எழும்பூர் – நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகம் பேர் பயணிப்பதால், கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததையடுத்து, இரு மார்க்கத்திலும் வரும் 11ஆம் தேதி முதல் 16 பெட்டிகளாக இயக்கப்பட உள்ளன. நெல்லை – எழும்பூர் (6AM- 1.50PM), எழும்பூர் – நெல்லை (2.50PM – 10.40PM) SHARE IT
சென்னையில் இன்று (07.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
அண்ணா நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக வட்ட செயலாளர் சுதாகர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் ராஜியை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே சிறுமியின் தாய்மாமன் மகன் மற்றும் சதீஷ் ஆகிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரில் தற்போது இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துரைப்பாக்கத்தில் அருண்குமார் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துரைப்பாக்கத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும் நீலாங்கரையைச் சேர்ந்த சதீஷ் என்பவரும் நேற்றிரவு ஒன்றாக மது அருந்தி உள்ளனர். மது போதையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், அருண்குமாரை சதீஷ் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அருண் உயிரிழந்துள்ளார். போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதித்துள்ளது. சளி, இருமல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடலில் சளி, இருமல், புளு காய்ச்சல், தொண்டையில் எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் மூச்சிரைப்பு, சுவாசிப்பதில் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், இது HMPV வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். உங்களுக்கு இருக்கா?
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி:- முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பு பேருந்துகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. போக்குவரத்து நெடுஞ்சாலை வனத்துறை மாநர அதிகாரிகள் என பல்வேறு துறைகளுடைய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 21,904 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஊர்களிலிருந்து திரும்ப 22676 பேருந்து இயக்கப்படும்
ரிப்பன் கட்டட வளாகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை மேயர் பிரியா, நேற்று துவங்கி வைத்தார். ரூ.2.06 கோடி மதிப்பில் நீர்வழிப்பாதைகளில் மருந்து தெளிக்கும் வகையில் 15 வாகனங்களுடன் கூடிய கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் மற்றும் 30 வாகனங்களில் புகைப்பரப்பும் இயந்திரங்களை, கொடியசைத்து பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.