India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில், பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்வோரின் வசதிக்காக இன்று முதல் (ஜன. 10) வரும் 13ஆம் தேதி வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேயரின் நிதிநிலை அறிக்கையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளி மாணவர்களின் 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி அந்த கல்வி சுற்றுலாவினை நேற்று (ஜன.09) ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையொட்டி தொடர் விடுமுறை இருப்பதால், சென்னையில் இருந்து செல்வோரின் வசதிக்காக நாளை (ஜனவரி 10) முதல் வரும் 13ஆம் தேதி வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு சில ஆம்னி பேருந்துகளில் ரூ.4,000 கட்டணம் வசூலிக்கப்படுவடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கட்டண கொள்ளையை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் எனும் ஆராய்ச்சி முடிவுகளை ‘அவதாா் குழுமம்’ நேற்று (ஜன.8) வெளியிட்டது. அதில், நகரங்கள் வாரியாக 10க்கு 7.08 மதிப்பெண் பெற்று சென்னை 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், வாழ்க்கைத் தரம் வாரியாக சென்னை முதல் 3 இடங்களில் உள்ளது. இது கடந்த ஆண்டு பிப்., முதல் நவ., வரை நாடு முழுவதும் உள்ள 60 நகரங்களில் 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஷேர் செய்யுங்கள்
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வழிப்பறி செய்த பணத்தில் அதிநவீன உடற்பயிற்சி கூடமும், ஈசிஆர் பகுதியில் ரிசார்ட் வாங்கி சொகுசாக வாழ்ந்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. AGM, JGM, DGM மற்றும் மேனஜர் லெவல் கொண்ட 6 பணியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.85,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். 7 முதல் 17 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட 47 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 20ஆம் தேதிக்குள் இந்த <
2025ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக, அதிமுக எதிர்க்கட்சியினர் யார் அந்த சார்? என்ற பேச்சுடன் சட்டப்பேரவைக்கு வந்த நிலையில், இன்று (ஜன.8) 3ஆவது நாளாக சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்தனர். குறிப்பாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தது அனைவரையயும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து உங்கள் கருத்து?
புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையம் நோக்கி, கார் ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருக்கிறது. காரை லட்சுமி காந்தன் என்ற இளைஞர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கார் மீது லாரி ஒன்று மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த இளைஞர் காருக்குள் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட தீயணைப்பு துறையினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
எழும்பூர் – நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகம் பேர் பயணிப்பதால், கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததையடுத்து, இரு மார்க்கத்திலும் வரும் 11ஆம் தேதி முதல் 16 பெட்டிகளாக இயக்கப்பட உள்ளன. நெல்லை – எழும்பூர் (6AM- 1.50PM), எழும்பூர் – நெல்லை (2.50PM – 10.40PM) SHARE IT
Sorry, no posts matched your criteria.