India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைக்க உள்ளதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “காணும் பொங்கலன்று மெரினா கடற்கரையில் கூடும் லட்சக்கணக்கான மக்களால், கடற்கரை குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது. எனவே அன்றைய தினம் அளிக்கப்படும் அரசு விடுமுறையை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைப்போம்” என குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் மாநகர பேருந்துகளில் பயணிப்பதற்கான ரூ.1,000 பயண அட்டை, மாதாந்திர சலுகை பயண அட்டை, 50% மாணவர் சலுகை அட்டைகளின் விற்பனை காலம் வரும் ஜன. 24ஆம் தேதி வரை மாநகர போக்குவரத்துக் கழகம் நீடித்துள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையை அடுத்து பயணிகளின் நலன்கருதி இம்மாதம் மட்டும் நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
கோமியம் பருகுவது நல்லது என சென்னை IIT இயக்குனர் காமகோடி பேசியதற்கு, பிற்போக்குத்தனமான கருத்துகளை அவர் பேசிவருவதாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கோமியத்தில் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. நாங்கள் பஞ்சகாவியம் சாப்பிடுவது வழக்கம். இது தொடர்பாக பேசுவதை தாம் நேர்மறையாக பார்ப்பதாக IIT இயக்குநர் காமகோடி கூறியுள்ளார்.
சென்னையில் பெற்றோரே 10ம் வகுப்பு படிக்கும் மகளை பாலியல் தொழிலில் தள்ளி, அதை காணொளியாக எடுத்து, இணையதளத்தில் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணையில் ஆறு சிறுமியரின் ஆபாச காணொளி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள ஆறு பேரை, தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எம்.பி.ஏ, எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21வரை www.tancet.annauniv.edu விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்.எம் ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான CEETA தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.90.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டில் கொள்ளை, திருட்டு, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் மாநகரங்களின் பட்டியலில் பாதுகாப்பான நகரமாக சென்னை இருப்பது தேசிய அளவிலான புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் உள்ள 120 நகரங்களில் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை, கொள்ளை, திருட்டு, உள்ளிட்ட விவரங்களின் படி சென்னை தான் பாதுகாப்பான இடமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
சென்னையில் இன்று (ஜன.19) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மக்களின் பிரதான போக்குவரத்தாக உள்ள மெட்ரோ ரயில்களில் தினமும் பயணம் செய்பவர்கள் க்யூ லைனை தவிர்க்க டிஜிட்டல் டிக்கெட் மற்றும் மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், வரும் ஏப்ரல் முதல் இந்த மெட்ரோ கார்டுகள் செல்லுபடியாகாது என தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ கார்டுகளுக்கு பதிலாக சிங்கார சென்னை கார்டை பயன்படுத்த தொடர்ந்து பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.