Chennai

News August 14, 2025

சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 டிக்கெட்..! அதிர்ச்சியில் மக்கள்

image

3 நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 வரையும், சென்னை- கோவை, சென்னை- சேலம், சென்னை- திருச்சிக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சொந்த ஊர் செல்லும் மக்கள் கவலை அடைந்தள்ளனர். அதிக கட்டணம் வசூலித்தால் 1800-424-6151 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

News August 14, 2025

சென்னை: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <>இந்த லிங்கில் <<>>வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 17ரயில்கள் ரத்து

image

சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் பொன்னேரி- கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்றும், வரும் 16, 18ம் தேதிகளில் மேம்பாட்டு பணி நடப்பதால் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9:40, பகல் 12:40, சென்ட்ரல்- சூலுார்பேட்டை காலை 10:15, பகல் 12:10, மதியம் 1:05 என மேற்கண்ட நாட்களில் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

ரூ.5,000 கோடியில் சென்னையில் வாட்டர் மெட்ரோ

image

மெட்ரோ சேவையின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை கோவளம் மற்றும் நேப்பியர் பாலம் இடையே 53 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. நேப்பியர் பாலம்- கோவளம் இடையே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைத்து, தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. வாட்டர் மெட்ரோவை இயக்குவதற்கு மொத்தச் செலவு சுமார் 3,000 முதல் 5,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்து.

News August 14, 2025

சென்னை: டிகிரி போதும்..IOB வங்கியில் சூப்பர் வேலை!

image

சென்னை மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20-க்குள்<> இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News August 14, 2025

மாதம் ரூ.1,000 வேண்டுமா? இங்கு போங்க

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட்.14) திருவொற்றியூர், கோடம்பாக்கம், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 13, 2025

புனித ஜார்ஜ் கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு

image

79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணின் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில் புனித ஜார்ஜ் கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 5அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News August 13, 2025

சென்னையில் மூக்கை கடித்து குதறிய நாய்

image

பூவிருந்தவல்லி அருகே கட்டுமான பணி நடக்கும் இடத்தில் பாதுகாப்புக்காக இருந்த ராட்வீலர் நாய் கடித்து ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அந்நாய் கடித்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவரின் மூக்கு துண்டானது. மேலும், மேல் சிகிச்சை்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து சென்னையில் நாய் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News August 13, 2025

JUST IN: தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்கு பதிவு

image

தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தூய்மைப் பணியாளர்களை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி கலைந்து செல்ல காவல்துறை அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களை தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதால், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய கூடாது என தமிழிசை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 13, 2025

கூக்குரல் கேட்கலையா? உதயநிதிக்கு கண்டனம்

image

நடிகர் ரஜினி நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2 வாரங்களாக தூய்மை பணியாளர்கள் சாலையில் போராடி வரும் நிலையில், அதனை கண்டுகொள்ளாத துணை முதல்வர் ‘கூலி’ படத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார் என்றும் தூய்மை பணியாளர்களின் கூக்குரல் அவருக்கு கேட்கவில்லையா? என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விளாசியுள்ளனர்.

error: Content is protected !!