India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கள்ளுக்கடை பகுதியை நோக்கி, கிழக்கு கடற்கரை சாலை வழியாக 1 லட்சம் எண்ணிக்கையிலான புதிய காலி குவார்ட்டர் மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி நிலைதடுமாறி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் பரந்தாமன் (52) சிறு காயங்களுடன் அதிஷ்ட–வசமாக உயிர் தப்பினார்.
இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700- 47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையத்தில் வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய அனாமிக ரமேஷ் பயன்படுத்திய அரசு வாகனம் TN 19G 0166 கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமை செயலாளரின் வருகையின் போது மாமல்லபுரம் பகுதியில் அதிவேகமாக 105 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. தற்போது (பிப்.21) அதிவேகமாக சென்றதற்காக போக்குவரத்துத்துறை சார்பில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 28 வயதிற்குள் இருக்கும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.70,290 வரை சம்பளம். ஆர்வமுள்ளவர்கள் https://clri.org/careers.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச்.01. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் நேற்று மாலை தன்னுடைய பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர தனது பைக்கில் சென்றார்.தண்டலம் அருகே வந்த போது வேகமாக வந்த கார் மோதி,சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் காரில் பயணம் செய்த 6 பேர் காயமடைந்தனர்.இதற்கிடையே விபத்தில் இறந்த சுரேஷின் உறவினர்கள்,பொதுமக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
செங்கல்பட்டு அருகே சென்னேரி கிராமத்தை சார்ந்தவர் மாறி 55 பாம்பு பிடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார் இந்நிலையில் இவரது வீட்டின் அருகே வயல்வெளியில் கடந்த 14ஆம் தேதி பாம்பு பிடிக்க சென்ற போது கண்ணாடிவிரியன் பாம்பு கடித்ததாகவும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்
செங்கல்பட்டில், தொழில்முனைவோர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள், முதல்வர் மருத்தகம் அமைக்க விண்ணப்பித்த நிலையில், அதில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தில், கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கள் 15 இடங்களிலும், 20 பேர் என மொத்தம் 35 முதல்வர் மருந்தகம் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. இம்மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வரும் 24ஆம் தேதி, காணொலி காட்சி வாயிலாக திறந்து வைப்பதாக கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.
வாரஇறுதி விடுமுறையை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 21ம் தேதி 245 பேருந்துகளும், 22ஆம் தேதி 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 59 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
கூடுவாஞ்சேரி – சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.90.74 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் வலதுபுறப் பகுதியை அமைச்சா் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று (பிப்.19) திறந்து வைத்தாா். இதன் மூலம் வெகுவாக போக்குவரத்து நெரிசல் குறையும். சுமார் 20 ஆண்டுகால காத்திருப்புக்கு நேற்று விடிவுகாலம் பிறந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.