Chengalpattu

News November 19, 2024

வேடந்தாங்கலில் தெலங்கானா வனத்துறையினருக்கு பயிற்சி

image

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், தெலங்கான மாநிலத்தைச் சேர்ந்த 40 வனத்துறையினருக்காக நேற்று சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இவர்களுக்கு வனத்துறை அதிகாரி கனிமொழி, சரணாலயத்தின் கட்டமைப்புகள், பறவைகளின் வாழ்வியல், உணவு தேடும் முறை மற்றும் ஏரியின் கரைகளில் அமைக்கப்பட்டுள்ள மரங்கள் மற்றும் அவற்றின் மூலம் பறவைகள் பெறும் பயன்கள் குறித்து விளக்கினார்.

News November 19, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 280 மனுக்கள் பெறப்பட்டன

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பட்டா, முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்டவைகள் தொடர்பாக 280 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News November 18, 2024

100 நாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

image

காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு முன், இன்று ஒழலூர் கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். முன்னதாக 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

News November 18, 2024

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவருக்கு அமைச்சர் அஞ்சலி 

image

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் மா.சா.முனுசாமி மறைவிற்கு மதுராந்தகத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ள உடலுக்கு அமைச்சர் அன்பரசன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மறைந்த மா.சா.முனுசாமி தனது இறப்பிற்கு பிறகு தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்படி அவருடைய உடல் தானமாக வழங்கப்பட உள்ளது.

News November 18, 2024

வங்கியில் கடன் உதவி பெற ஆட்சியர் அழைப்பு

image

தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி கிளைகள் உள்ளது. இந்த வங்கிகளில், குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9842660649 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்தார்.

News November 18, 2024

ரயில் சேவை ரத்தால் பேருந்து நிலையங்களில் குவிந்த  மக்கள்

image

சென்னை கடற்கரை- தாம்பரம் தடத்தில், பராமரிப்பு பணிக்காக நேற்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் அரசு சார்பில் தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மின்சார ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம், குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர்.

News November 18, 2024

வாக்காளர் சிறப்பு முகாமில் அமைச்சர்

image

செங்கல்பட்டு நகராட்சி, மறைமலை நகராட்சி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் உள்ள வாக்காளர்கள் சிறப்பு முகாம்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று காலை ஆய்வு செய்தார். அவருடன் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் இருந்தார்.

News November 17, 2024

ரயில்கள் ரத்து எதிரொலி – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (நவ.17) காலை 7-5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால், ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எனவே பயணியரின் வசதிக்காக கூடுதலாக தாம்பரத்தில் இருந்து பல்லாவரத்துக்கு 10, தி.நகருக்கு 20, பிராட்வேக்கு 20 என 50 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News November 17, 2024

அமைச்சர் அன்பரசனுடன் நடிகர் சந்தானம் சந்திப்பு

image

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை, பிரபல தமிழ் திரைப்பட காமெடி நடிகர் சந்தானம் நேரில் சந்தித்து பேசினார். அமைச்சர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பானது, மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடித்ததால், அவரை அழைத்து பேசியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

News November 17, 2024

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை

image

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு, மாவட்டத்தில் உள்ள 49 ஆரம்ப சுகாதார நிலையங்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக் மருத்துவமனை, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில், காய்ச்சல் பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்தால் இந்த பாதிப்பு குணமாகிவிடும்.

error: Content is protected !!