India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்டாங்கொளத்துார், கீரப்பாக்கம் அருகே உள்ள பெரிய அருங்கால் கிராமத்தின் அருகில் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில், 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று ஏரியில் இருந்து ஊர்ந்து ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் சாலையை கடந்து அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் சென்றுள்ளது. தகவலறிந்து வந்த தாம்பரம் வனத்துறை அதிகாரிகள், முதலையை உயிருடன் பிடித்து வண்டலூரில் ஒப்படைத்தனர்.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. எனவே, இன்று முதல் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, பிராட்வேயில் இருந்து தாம்பரம் வழியாக கூடுதலாக 20 பேருந்துகள் பயணிகள் நலன் கருதி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
செங்கல்பட்டு சிஎஸ்ஐ அலிசன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் (நவ22) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை கொடி அசைத்து துவங்கி வைத்தார். அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த நவ.1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அன்று விடுமுறை என்பதால், நாளை (நவ.23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 359 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மண்டல பகுதியில், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களை ஊக்கப்படுத்தி சிறப்பிக்க, அத்துறை சார்பில் மண்டல ஓவியம், சிற்பக் கண்காட்சி தற்போது நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் கலைஞர்கள், மண்டல கலை, பண்பாட்டு மையம், சதாவரம், கோட்டைக்காவல், ஓரிக்கை, காஞ்சிபுரம் – 631502 என்ற மண்டல முகவரிக்கு டிச.10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக அசோக் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர், வேளாண்மை கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு பெற்று, தற்போது சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, கடலுார் மாவட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநராக பணியாற்றிய பிரேம்சாந்தி, இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். பிரேம்சாந்தி நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள், தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக, கடற்கரையில் இருந்து புறப்படும் 14 ரயில்கள், தாம்பரத்தில் இருந்து புறப்படும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற 200 ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படுவதைவிட 5 – 10 நிமிஷம் தாமதமாக இயக்கப்படும். ஷேர் செய்யுங்கள்.
ஓ.எம்.ஆர். சாலை சோழிங்கநல்லூர் பகுதியில், நேற்று சாலையின் எதிர் திசையில் சென்ற இருசக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பைக்கில் சென்ற சோழிங்கநல்லூரைச் சேர்ந்த முருகன் (55), நாகராஜ் (48) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர்.
மாமல்லபுரம் அருகே உள்ள வட நெம்மேலியில், பீச் வாலிபால் போட்டி நேற்று தொடங்கியது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ. பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள் என தலா 24 அணிகள் 150க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். வரும் 24ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறும்.
Sorry, no posts matched your criteria.